அண்ணாமலையை உயர்த்தி பேசியதருக்கு இவ்வளவு ரூபாய் கொடுத்தார்கள் – கவுண்டமணி பிச்சைக்காரி காமெடி நடிகை.

0
2035
vasuki
- Advertisement -

நமது 90’ஸ் காமெடி நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் போன்ற காமெடி நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் தான் நடிகை வாசுகி. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கவுண்டமணி பிச்சைக்காரர் வேடமணிந்து ஒரு படத்தில் நடித்திருப்பார் அந்த படத்தில் கவுண்டமணி உடன் பிச்சைக்காரி வேடமணிந்து நடிகை வாசிகியும் நடித்திருப்பார் தற்போது நடிகை வாசுகி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறேன் என்றும் பாஜகவில் கடசியில் சேர்ந்தால் பணம் கொடுப்பதாக சொன்னதால் பாஜகவில் இணைந்து என்றும் நடிகை வாசுகி யூடியூப் நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார் வாருங்கள் பார்க்கலாம்.

-விளம்பரம்-

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்ட வாசுகி சிறிது நாட்கள் கடந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடத்திய ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு. அந்தப் போராட்டத்தில் அவர் மைக்கை பிடித்து பேசியது கொஞ்சம் நெஞ்சம் அல்ல மைக்கை கையில் பிடித்த வேகத்தில் இன்றைய முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரை விமர்சித்து பேசினார். மேலும் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எங்கள் எம்ஜிஆரை போல் தமிழ்நாட்டை ஆள வந்தவர் என அண்ணாமலையை புகழ்ந்து பேசினார்.

- Advertisement -

புகழ்ந்து பேசியதற்கு 10000 :-

பின்பு பாரத ஜனதா கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் வாசுகி பேசிய வீடியோக்கள் இணையத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக ஷேர் செய்யப்பட்டு வந்தனர். இதனை அடுத்து ஒரு தனியார் யூடியூப் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நடிகை வாசுகி உண்மைகளை போட்டு உடைத்தார்.அவர் கூறியது பாரதிய ஜனதா கட்சியின் உண்ணாவிரத போராட்டத்தில் பேசியதற்காக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்றும் அந்தப் பணத்திற்காக மட்டுமே அண்ணாமலை அவர்களை கொஞ்சம் புகழ்ந்து பேசினேன் என்றும் நான் அண்ணாமலையே நேரில் பார்த்ததே இல்லை இன்று தான் முதல் முறையாக பார்த்தேன் என்றும் வாசுகி கூறினார்.

பாஜாகவில் இனைந்தற்கு காரணம் :-

பின்பு பழைய கதைகளை பேச தொடங்கிய வாசுகி பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு முன்பாக நான் 22 வருடங்கள் பேச்சாளராக மட்டும் தான் இருந்திருக்கிறேன். எனக்கு கட்சியில் இருந்தோ எந்தவித பொறுப்பு கொடுத்ததும் கிடையாது மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இறந்த பின்பு பொதுக்கூட்டங்கள் எதுவும் போடாததால் எனக்கும் வேலை இல்லாமல் போனது நாங்கள் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன் இந்நிலையில் தான் வேறு வழி இல்லாமல் பாரதியார் ஜனதா கட்சியில் இணைந்தேன் என்று அவர் கூறினார்.

-விளம்பரம்-

பேசியதற்கு மன்னிப்பு கேட்ட வாசுகி :-

எனக்கும் வயதாகிவிட்டது எனக்கு வேற சொந்த பந்தங்கள் யாரும் இல்லை கூட்டங்கள் நடத்தினால் தான் எனக்கு காசு கிடைக்கும் இல்லையென்றால் கஷ்டப்பட தான் செய்வேன். இதனால் பாஜகவில் இணைந்து விட்டேன் மேலும் பேசிய வாசுகி நான் முதலமைச்சர் மற்றும் உதயநிதி அவர்களையும் தவறாக பேசி விட்டேன் மற்றும் கடுமையாகவும் விமர்சித்து விட்டேன் நான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது இனிமேல் பேசமாட்டேன் நான் என்னை திருத்திக் கொள்கிறேன் நானும் ஒரு கட்சி சார்ந்த பேச்சாளர் தான் என்று பாஜகவில் இணைந்த காரணத்தையும் முதலமைச்சரே பேசியதற்கு மன்னிப்போம் கேட்டுக்கொண்டார் நடிகை வாசுகி.

Advertisement