மறைந்த காமெடி நடிகர் விவேக்கின் இரட்டைக் குழந்தைகள் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார்.

அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் பல லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
விவேக் மறைவு :
பின் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. அவர் கடைசியாக ‘இந்தியன் 2 ‘ படத்தில் கமிட் ஆன போது தான் உயிரிழந்தார். இதற்கிடையே, நடிகர் விவேக் அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும், ஒரு ஆண் குழந்தை உடல் நலக்குறைவால் மறைந்ததும் நாம் மறைந்ததே. இந்நிலையில், நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி, முதல் முறையாக தங்களின் இரட்டை குழந்தைகள் பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
https://www.youtube.com/shorts/z6-VEDyT4gk
விவேக் மனைவி பேட்டி :
அதில், விவேக் - அருள் செல்வியின் மூத்த மகள் பெயர் அம்ரிதா நந்தினி, இவர் ஒரு ஆர்க்கிடெக்காக இருக்கிறாராம். இரண்டாவது மகள் தேஜஸ்வினி இவருக்கு தான் கடந்த ஆண்டு திருமணம் நடந்ததாம். பெங்களூருவில் வசித்து வரும் அவர் சட்டப்படிப்பு படித்து வருகிறாராம். அதோடு விவேக்கின் மருமகன் அமேசான் நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து பிறந்தவர்தான் பிரசன்னா. இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2015 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
இரட்டைக் குழந்தைகள் குறித்து :
பிரசன்னாவின் மறைவுக்குப் பிறகு, விவேக் - அருள் செல்வி தம்பதிகளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தார்களாம் . இவர்களின் பெயர் பிரசாந்தினி மற்றும் பிரார்த்தனா என்று அவர் தெரிவித்திருக்கிறார். இவர்கள் இருவரும் தற்போது 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார்களாம். கடந்த 2017 ஆம் ஆண்டு பிறந்த இவர்களுக்கு தற்போது ஏழு வயது ஆகிறது என்றும் கூறியிருக்கிறார். நடிகர் விவேக்கிற்கு இரட்டை குழந்தைகள் இருக்கும் தகவல் பலருக்கும் தெரியாத நிலையில், தற்போது அருள்செல்வி கூறி இருப்பது ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறது.

பெயர் வைத்த கதை :
மேலும், தங்களின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்த சுவாரசியமான கதையை அவர் பகிர்ந்து உள்ளார். அதில் ஒரு முறை விவேக் காஞ்சிபுரம் அருகே இருக்கும் கோ சாலையை பார்வையிட சென்றபோது, அங்கிருந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் எவ்வளவு தூரம் என அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம். அவர்கள் அருகில்தான் என்று சொன்னவுடன், விவேக் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று, மனைவி மற்றும் மகள்கள் கூறிய பெயர்களை அனைத்தும் சீட்டுகளில் எழுதி அம்மன் காலடியில் வைத்து, பின் அதில் இரண்டு சீட்டுகளை மட்டுமே எடுத்துக் கொடுக்க சொல்லி விவேக் ஐயரிடம் கூறியிருக்கிறார். அந்தப் பெயர்கள் தான் பிரசாந்தினி மற்றும் பிரார்த்தனா என்று நெகிழ்ச்சியோடு விவேக்கின் மனைவி பகிர்ந்திருக்கிறார்.






