கணவரும் இறந்துட்டார், வாய்ப்பும் இல்ல, வாழ்றதா சாகுறதா தெரியல – கண்ணீர் மல்க கூறிய காமெடி நடிகை.

0
391
vadivelu
- Advertisement -

எல்லோர் முன்னாடியும் வடிவேல் சாரை திட்டி விட்டேன் என்று நடிகை பிரேமா ப்ரியா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவர் சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வருகிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் வடிவேலு தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு தான். இது பலரும் அறிந்த ஒன்று. இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

வடிவேலு திரைப்பயணம்:

பின் வடிவேலு அவர்கள் 23ம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அந்த பெற்றது. அதை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சில ஆண்டு காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து தற்போது வடிவேலு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

வடிவேலு நடிக்கும் படங்கள்:

அந்த வகையில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேல் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஜீவியின் படம், தலைநகரம் 2 போன்ற பல படங்களில் வடிவேலு கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பிரேமா பிரியா அளித்த பேட்டி:

இந்த நிலையில் வடிவேலு குறித்து நடிகை பிரேமா பிரியா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. வடிவேல் சார் உடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். நான் அவருடன் கடைசியாக நடித்த படம் சுறா. அந்த படத்தில் ஒரு காட்சியில் என்னை நடிக்க சொல்லி இயக்குனர் சொன்னார். அப்போது வடிவேலு சார், இல்லை வேறு ஒரு ஆர்டிஸ்ட் நடிக்கட்டும் என்று சொன்னார்.ஏனென்றால், என்னை வடிவேல் சாரிடம் அறிமுகப்படுத்திய ஆர்டிஸ்ட்க்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனை இருந்தது. அவர்களால் தான் நானும் அந்த மாதிரி செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு வடிவேல் சார் என்னுடைய வாய்ப்புகளை தடுத்தார்.

வடிவேலு குறித்து சொன்னது:

இதனால் படப்பிடிப்பிலேயே கொஞ்சம் பிரச்சினையாக இருந்தது. அப்போது எனக்கு அந்த அளவிற்கு விவரம் தெரியவில்லை. இதனால் எல்லோர் முன்னாடியும் வடிவேல் சாரை நான் திட்டி விட்டேன் என்று கூறி இருக்கிறார். மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரேம பிரியா, தற்போது வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் தனது கணவரும் இறந்துவிட்டார். என் வாழ்க்கை மோசமாக சென்று கொண்டு இருக்கிறது என்றும் கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

Advertisement