நடிகர் விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! விவரம் இதோ

0
952
vijay

நடிகர் விஜய், சர்கார் படத்தின் இயக்குநரிடம் பேசி படத்தின் சிகரெட் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விஜய் மீது புகார் கொடுத்துள்ளார்.

ADV_TAMILVENDAN

அவர் கூறுகையில், இன்று புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புகையிலைப் பொருள்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. இதனால் புகையிலைப் பொருள்களை விளம்பரம் செய்யத் தடை உள்ளது. பல கொலை, கொள்ளைகளுக்கு சினிமா முக்கிய காரணமாக இருந்துவருகிறது.

பொதுவாக சினிமா நடிகர்களைப் பலர் தங்களின் ரோல் மாடலாகப் பின்பற்றிவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. இதைப்பார்க்கும் ஏராளமான இளைஞர்கள் சிகரெட் பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் இளையதலைமுறை சீரழிய வாய்ப்புள்ளது. எனவே, இந்தக் காட்சியை நீக்க இயக்குநர், விஜய் ஆகியோரிடம் பேசி காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.