வேட்டையன் பட இயக்குனர் ஞானவேல் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா, துஷாரா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். இந்த நிலையில் வேட்டையன் பட இயக்குனர் ஞானவேல் மீது போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.வேட்டையன் படத்தினுடைய தொடக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் குறித்து சில காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியரை படம் எடுத்து தவறாக சித்தரித்து சோசியல் மீடியாவில் பரப்பி மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கும்.
இயக்குனர் மீது புகார்:
இப்படி படத்தில் இடம்பெற்றது போல் கோவில்பட்டி காந்தி நகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. படத்தில் வரும் காட்சி அந்த பள்ளியை சித்தரித்தும், விமர்சித்தும் தான் கூறி இருக்கிறார்கள் என்றும், அதனை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் அவர், கோவில்பட்டி காந்தி நகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
#NewsUpdate | வேட்டையன் பட இயக்குநர் மீது புகார்#NewsTamil24x7 | #Vettaiyan | #Rajinikanth𓃵 | #Kovilpatti | #gnanavelRaja | #DirectorGnanavel | #VettaiyanBlockbuster pic.twitter.com/I0ZMLxexsy
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 11, 2024
புகாருக்கான காரணம்:
இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றிருக்கிறது. 2009 -2010 ஆம் ஆண்டில் தமிழகத்தினுடைய சிறந்த அரசு பள்ளியாக காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தேர்ந்தெடுத்து விருதும் கொடுத்திருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் வேட்டையன் படத்தில் அந்த பள்ளியை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சி இடம் பெற்றிருக்கிறது. அதை நீக்க வேண்டும். அந்த காட்சியை நீக்கவில்லை என்றால் வேட்டையன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் முற்றுகையிடுவோம் என்று கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தாக்கியும், அவர்களின் அடையாள சின்னம் குறித்து பேசி இருந்ததாக மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது.

வேட்டையன் படம்:
படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இருக்கிறார். எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் ரவுடிகளை சுட்டு தள்ளுகிறார். இன்னொரு பக்கம் நேர்மையான அரசு பள்ளி ஆசிரியராக துஷாரா விஜயன் இருக்கிறார். ஆனால், இவரை கொடூரமான முறையில் யாரோ ஒருவர் கொலை செய்து விடுகிறார். அந்த வழக்கு ரஜினி இடம் விசாரணைக்கு வருகிறது. இன்னொரு பக்கம் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக பல வேலைகள் நடக்கிறது. இது தெரியாமல் ரஜினிகாந்த் கடைசி நேரத்தில் உள்ளே வந்து சம்பந்தமில்லாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார்.
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 11, 2024
வேட்டையனுக்கு கண்டனம்:
கோவில்பட்டியில் திரையரங்கம் முன் போராட்டம் #Vettaiyan #Kovilpatti #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/evp1uDCfji
படம் குறித்த தகவல்:
மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமாக இருக்கும் அமிதாபச்சன் குழுவினரிடம் இந்த வழக்கு விசாரணைக்கு செல்கிறது. கடைசியில் உண்மையான குற்றவாளி யார்? துஷாரா விஜயனை கொலை செய்தவர்கள் யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? ரஜினிகாந்துக்கு என்ன ஆனது? அமிதாப்பச்சனின் தீர்ப்பு என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.






