‘Real Life மாற்றான்’ – பெற்றோர் கைவிட்ட நிலையில் தற்போது அரசு வேலையில் சேர்ந்துள்ள இரட்டையர்கள்.

0
671
maatran
- Advertisement -

இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் மாற்றான். இந்த படத்தில் சூர்யா அவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் ரியல் மாற்றான் இரட்டையர்கள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். 2003 ஆம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி டெல்லி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை தான் அந்த இரட்டையர்கள்.

-விளம்பரம்-

மாற்றான் சகோதரர்கள் :

நான்கு கைகள், இரண்டு கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இவர்கள் பிறந்ததை அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் என யாராலும் நம்ப முடியவில்லை. பலரும் வியந்து போனார்கள். ஒரே உடலில் இரண்டு தலைகள், நான்கு கைகள், இரண்டு சிறுநீரகம், இரண்டு இதயம் கொண்டு அந்த இரட்டையர்கள் பிறந்தார்கள். மேலும், பிறந்த உடனேயே இவருடைய பெற்றோர்கள் இவர்களை அனாதையாக விட்டுச் சென்றார்கள்.

- Advertisement -

கைவிட்ட பெற்றோர்கள் :

பின் இந்த குழந்தைகளின் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். அங்கு அவர்களை தனியாக பிரித்தால் ஏதேனும் ஒரு உயிருக்கு ஆபத்து இருக்கு என்று மருத்துவர்கள் அறிவித்தார்கள். இதனையடுத்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வில்லை. மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் தான் இவர்களுக்கும் சுதந்திரம் கிடைத்தது. அதாவது 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமிர்தசரசில் உள்ள பிங்கள்வாரா என்ற அறக்கட்டளை இந்த இரட்டையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.

அரசு வேலை :

பின் அந்த அறக்கட்டளையில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை அன்போடு அரவணைத்து வந்தார்கள். பல இன்னல்களை கடந்து இந்த ஒட்டி பிறந்த இரட்டையர்கள் எலக்ட்ரீசியன் படிப்பில் டிப்ளமோ நிறைவு செய்திருக்கிறார்கள். பின் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து வந்தனர்.அப்போது தான் இவர்கள் வாழ்வில் ஒரு அதிசியம் நடந்தது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அதிகாரி இவர்களைப் பற்றி கேள்விப்பட்டு விசாரித்தார். பின் இவர்கள் மிக திறமையான எலெக்ட்ரிசியன்கள் என்பதை அறிந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீடு அடிப்படையில் இவர்களுக்கு அரசு வேலை வழங்கினார்.

-விளம்பரம்-

வியந்த அரசு அதிகாரிகள் :

மேலும், இவர்களின் தொழில் நுட்பம் தங்களை வியக்க வைத்தது என்று அங்கிருக்கும் அரசு அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். பின் இந்த ஒட்டி பிறந்த இரட்டையர்கள் பஞ்சாப் மாநில அரசின் இந்த அறிவிப்பு தங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிக்கு கௌரவப்படுத்தியது உள்ளதாகவும், நேர்மையாகவும் முழு அர்ப்பணிப்புடனும் தாங்கள் பணியாற்றுவோம் என்றும் கூறியிருக்கின்றார்கள்.மேலும், தங்களை சொந்த காலில் நிக்க வாய்த்த பிங்கல்வாரா அறக்கட்டளைக்கு நன்றி என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

குவியும் பாராட்டுக்கள் :

பிங்கல்வாரா அறக்கட்டளையின் தலைவர் இந்திரஜித் அவர்கள் இந்த இரட்டையர்களுக்கு பஞ்சாபின் வரலாற்று சிறப்புமிக்க நாவல் கதாபாத்திரங்களான சோக்னா, மோக்னா என்ற பெயரை வைத்தார். இப்படி இரண்டு இதயம், இரண்டு தலை, நான்கு கைகளுடன் வலம் வரும் இந்த இரட்டையர்கள் அரசு வேலையில் சாதித்து லட்சியத்தை நோக்கி ஓயாமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இவர்களைப் பற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் இவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement