முதல் முறையாக தன் காதலி குறித்து குக்கு வித் கோமாளியில் சொன்ன புகழ், அடேங்கப்பா இத்தன வருட லவ்வாம் – வைரலாகும் வீடியோ

0
927
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

புகழ் நடித்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் புகழ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா என்று பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து முடித்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி :

இதனிடையே விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. இதில் புகழ் வராததை குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் இருந்தார்கள். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த முறை போட்டியாளர்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் புகழ் வராதது ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை கொடுத்து இருந்தாலும் கடந்த எபிசோடில் புகழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அதிக உற்சாகத்தை தந்துள்ளது .

-விளம்பரம்-

வைரலாகும் புகழ் காதலி புகைப்படம்:

இது ஒரு பக்கமிருக்க புகழ் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதுவும் கடந்த சில மாதங்களாக இவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அதிகம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இது குறித்து ரசிகர்கள் பலரும் யார் இவர்? உங்கள் வருங்கால மனைவி யா? லவ்வரா? அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட கேர்ள் பிரண்டுடன் பைக் ரைட் என்று புகழ் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதில் புகழின் முதுகில் இருந்து ஒரு கை மட்டும் தெரியும். அந்த பதிவில் அவர் மிஸ் யூ பார்ட்னர் என்று புகழ் பதிவிட்டு இருந்தார். இதை எல்லாம் வைத்து பார்த்தால் அப்போது அந்த நபர் இவர்தானா? என்றும் கேட்டிருந்தார்கள்.

தன்னுடைய காதலி குறித்து புகழ் சொன்னது:

இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த எபிசோட்டில் தன்னுடைய காதலி குறித்து புகழ் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஐந்து வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும்போது இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம் என்று கூறி இருக்கிறார். இப்படி நிகழ்ச்சியில் புகழ் தன்னுடைய காதலைப் பற்றியும் திருமணத்தைப் பற்றியும் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கர்கள் புகழுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement