தள்ளிப்போன பிக் பாஸ் – இந்த ஆண்டே துவங்க உள்ள குக்கு வித் கோமாளி 3. எப்போது தெரியுமா ? அட நடுவரே சொல்லிட்டாரே.

0
1566
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.

-விளம்பரம்-
Cook with Comali Season 2 Five Finalist after Wildcard Round are?

கடந்த சில வாரங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்த நிலையில் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக சிம்பு வந்திருந்தார்.இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

- Advertisement -

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். ஓரிரு மாதத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Who is the winner and runnerups of 'Cooku With Comali 2'? - Tamil News -  IndiaGlitz.com

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற குக்கு வித் கோமாளியின் ஒரு நடுவாரான தாமுவிடம் சீசன் 3 எப்போது துவங்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தாமு,  இந்த சீஸன் முடிஞ்சது ரொம்ப கஷ்டமா இருக்கு. சீசன் 3 100% வர வாய்ப்பு இருக்கு. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்ல வரும். கோமாளிகள் இவங்களேதான். குக்ஸ் பெரும்பாலும் பிக்பாஸ், சீரியல் நட்சத்திரங்கள்னு வர வாய்ப்பு அதிகம் இருக்குது என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement