அது நடக்காம இருந்து இருந்தா எப்பவோ பைனல் வந்து இருப்பேன் – குக்கு வித் கோமாளி ஆன்ட்ரியன் உருக்கம்.

0
1621
Andy
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் பைனலிஸ்டாக தேர்வாகாத காரணம் குறித்து ஆன்ட்ரியன் அளித்திருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தற்போது டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல், பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4 :

இப்படிபட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக வந்து இருக்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சியின் டிக்கெட் டு ஃபினாலே சுற்று நடைபெற்றது.

நேரடியாக பைனலுக்கு தேர்வான நபர்:

இதில் விசித்திரா நன்றாக சமைத்து நடுவர்களிடம் பாராட்டுகளை பெற்றிருந்தார். அதோடு இவர் நேரடியாக பைனல் லிஸ்ட் என்று நடுவர்கள் அறிவித்திருந்தார்கள். பின் அரை இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் மைம் கோபி இரண்டாம் இடத்தையும், சிவாங்கி மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தார். நான்காவது போட்டியாளராக சிருஷ்டியும் தேர்வாகியிருந்தார். இவர்களை அடுத்து ஐந்தாவதாக கிரண் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஐந்தாவது போட்டியாளராக கிரனை நடுவர்கள் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆன்ட்ரியன் குறித்து ரசிகர்கள் கருத்து:

மேலும், கடந்த வாரம் வைல்கார்டு சுற்று நடந்தது. அதில் எலிமினேட் ஆன பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்து ஒருவரை finalist ஆக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அவர் வேறு யாரும் இல்லை ஆன்ட்ரியன். இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் விரைவாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இவர் நல்ல திறமையாக சமைப்பவர் தான். இருந்தாலும் எலிமினேட் சுற்றில் இவர் வெளியேறிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை கொடுத்தது.

ஆன்ட்ரியன் பதிவு:

இது குறித்து பலருமே சோசியல் மீடியாவில் ஒரு நல்ல குக்கை எலிமினேட் செய்துவிட்டார்கள் என்று பதிவிட்டிருந்தார்கள். அதற்கு ஆன்ட்ரியன் , அப்போது நான் குழப்பத்தில் இருந்தேன். அதனால்தான் இப்படி நடந்தது, இல்லையென்றால் நான் முதல் ஃபைனலிஸ்டாக வந்திருப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது இவர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த வாரம் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் இறுதி கட்ட சுற்று நடைபெற இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement