சீரியலில் வில்லன் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று தொடரும் பாகுபாடு குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் கமெண்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமா மட்டும் இல்லாமல் சீரியலிலும் ஜாதி பாகுபாடு குறித்த தவறான கண்ணோட்டம் அதிகமாக வருகிறது. ஆரம்ப காலத்தில் சினிமாக்களிலும், சீரியல்களிலும் வில்லன் என்றால் பெரிய மீசை, மரு, ஆஜானு பாகுவான உடல் அமைப்பு என்று இருப்பார்கள்.
இதை வைத்தே இவர் தான் இந்த படத்தில் வில்லன் என்று கண்டுபிடித்தார்கள். ஆனால், சமீப காலமாக சீரியலிலும், படங்களிலும் நெற்றியில் திருநீறு, குங்கும பொட்டு வைத்தால் தான் வில்லன் என்று கண்டுபிடிக்கும் நிலைமைக்கு ஆகிவிட்டார்கள். குறிப்பாக, சின்னத்திரை சீரியலில் தான் இந்த பாகுபாடு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழில் முன்னணி சேனல்களாக திகழும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற பல சேனல்களில் புதுப்புது கதைகளுடன் சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியல் குறித்த தகவல்:
அதேபோல் புதுப்புது வில்லன்களும் சீரியல்களை வருகிறார்கள். ஆரம்பத்தில் சீரியல்களில் பிற மதத்தவரை சேர்ந்தவர்களை தான் வில்லனாக காண்பித்து இருந்தார்கள். தற்போது திருநீறு வைப்பவர்கள் தான் வில்லன் என்று சீரியலில் முத்திரை குத்தி விட்டார்கள். உதாரணத்திற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் கயலுக்கு பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் வில்லன். அவருடைய நெற்றியில் பெரிய பட்டை போட்டுக் கொண்டிருப்பார்.
சீரியலில் வில்லன்கள்:
அதேபோல் சன் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருப்பார். இவர்தான் இந்த சீரியலில் முக்கியமான வில்லன். இவர் நெற்றியில் குங்குமம், திருநீரும் இருக்கும். இப்படி பல சீரியல்களில் வில்லனாக நடிக்கும் நபர்கள் திருநீறு குங்குமம் வைத்துக்கொண்டு சாமியை கும்பிடுபவர்களாக இருக்கிறார்கள்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
இந்நிலையில் இது குறித்து நெட்டிசன்கள், இந்துக்களாக இருப்பவர்கள் தான் வில்லனாக இருப்பார்களா? ஏன் இந்த மாதிரி சீரியலில் திருநீறு குங்குமம் வைப்பவர்களை விலனாக காட்டினீர்கள்? இதற்குப் பின்னனி என்ன? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு சீரியல் நிறுவனம் தான் பதில் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.