கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் சின்னத்திரை சீரியல் நடிகை ஆலியா மானசா குறித்த சர்ச்சை தான் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆல்யா. இவர் ராஜா ராணி என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் இனியா சீரியலில் நடித்து கொண்டு வருகிறார். இதனிடையே இவர் சீரியல் நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருமே தங்களுடைய கேரியரில் கவனமாக இருந்தாலும் தங்களுடைய குழந்தைகளுடனும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
அதோடு இவர்கள் சொந்தமாக கார், வீடு அதோடு வாங்கி இருக்கிறார்கள். இப்படி மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து சொகுசான வாழ்க்கையை ஆலியா மானசா-சஞ்சீவ் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆலியா மானசா இப்படித்தான் சம்பாதிக்கிறார். நீங்களும் இதே போல் சம்பாதித்து கோடிஸ்வரராக இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று சோசியல் மீடியாவில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த ஆலியா மானசா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
ஆல்யா அளித்த புகார்:
இதனை அடுத்து இவர் பேட்டியில் கூறியிருப்பது, நான் வணக்கம் தமிழகம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது உண்மை தான். அது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். அந்த நிகழ்ச்சியில் தான் நான் ஏதோ ஒரு மார்க்கெட்டிங் முறையில் கணக்கில்லாமல் சம்பாதிக்கிறதா என்னை பேட்டி எடுத்த ஆங்கரிடம் சொல்லி இருப்பதாக ஒரு செய்தி வந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் நான் சம்பாதிக்கிற முறை பற்றி எல்லாம் ஏன் பேசப் போகிறேன்? பத்தாயிரம் ரூபாய் கட்டினால் ஒரு லட்சம் கிடைக்கும் ரூபாய் சொன்னதெல்லாம் நம்ப வச்சுருக்கார்கள்.
போலி விளம்பரம் குறித்து சொன்னது:
அதேபோல் நான் கார் , வீடு வாங்கினேன் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே இஎம்ஐ என்று எத்தனை பேருக்கு தெரியும். இன்னைக்கும் எங்கள் பெயரில் கடன் இருக்கிறது. கடன் வாங்கினால் திருப்பி கட்ட சக்தி இருக்கு. அதனால் எனக்கு கடன் கிடைக்குது வாங்குகிறேன். எல்லாத்துக்கும் ரெக்கார்டு இருக்கு. குறுக்கு வழியில் சம்பாதித்து கோடீஸ்வரி ஆகிடனும் என்ற நினைப்பு என்ற ரத்தத்தில் கிடையாது. என்னைப் பற்றி தவறான செய்தி வந்த பத்திரிகையில் லே அவுட்டே போலி தான். அதனால்தான் நான் புகார் தந்தேன்.
ஆல்யா பேட்டி:
என் விளம்பரம் பார்த்து இதுவரை எங்கெங்கே எத்தனை பேர் ஏமாந்தாங்களோ தெரியாது. அதனால் என்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இப்படி ஏமாத்திட்டு திரிகின்ற அந்த கும்பலை கைது செய்ய சொல்லி போலீஸ் இடம் மறுபடியும் பேசலாம் என்று இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக பிரபல சேனல் போன் கால் மூலம் ஆல்யாவிடம் பேட்டி எடுத்து இருக்கிறார்கள். அதில் ஆல்யா, நான் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால், நேரில் வந்து புகார் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் சொல்லி விட்டார்கள்.
போலீஸ் புகார் குறித்து சொன்னது:
எனக்கு ஷூட்டிங் இருப்பதால் நேரில் சென்று புகார் கொடுக்க முடியவில்லை. இதனால் போலீஸ் எனக்காக ஒரு ஃபேவரட் செய்திருக்கிறார்கள். புகார் எழுதி யாராவது இடம் கொடுத்து அனுப்பி சொல்லி இருக்கிறார்கள். அதை தான் பண்ணப் போகிறேன். இந்த விளம்பரத்தினால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த உடனே சோசியல் மீடியாவில் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று பதிவு போட்டு விட்டேன். பிரபலங்கள் சிலர் போன் செய்து இந்த விளம்பரத்தில் முதலீடு செய்யலாமா என்று கேட்கும் போது தான் எனக்கு தெரியவந்தது. இந்த மாதிரியான ஸ்கேன் நிறைய நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையிலேயே நான் அந்த மாதிரி எந்த விளம்பரமும் செய்யவில்லை. எந்த இடத்திலும் அந்த விளம்பரத்தின் பெயரை பயன்படுத்தியது கிடையாது என்று கூறியிருக்கிறார்.