குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற இது தான் காரணம் – எலிமினேஷனுக்கு பின் ஆண்ட்ரியன் போட்ட எமோஷ்னல் பதிவு

0
2667
Andy
- Advertisement -

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறிய காரணம் குறித்து ஆன்டி பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருக்கி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்துகேயன் பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார்.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஷெரின், ராஜ் ஐப்பன், vj விஷால், கிஷோர், காளையன் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக செலப்ரேஷன், இம்யூனுட்டி என்று சென்று கொண்டு இருந்த நிலையில் இந்த சீசனில் முதல் ஆளாக ஷிவாங்கி டாப் 5 போட்டியாளராக நுழைந்தார். இதனை தொடர்ந்து விசித்ரா, மைம் கோபி, கிரன், ஆண்டி, ஸ்ருஷ்டி ஆகியோர் டாப் 5க்கு செல்ல காத்துகொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த வார எபிசோடில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இறுதியில் ஆண்டி வெளியேற்றப்பட்டார். இது பார்வையாளர்கள் உட்பட போட்டியாளர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஆன்டியின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த 3 சீசன்களாக 3 சமயல் பொருட்கள் கூட தெரியாத ஷிவாங்கி, நன்றாக சமையல் செய்யாத ஸ்ருஷ்டி ஆகியோர் இருக்கும் போது ஆன்டி வெளியேறியது நியாயம் இல்லாதது என்று கூறி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் தனது வெளியேற்றம் குறித்து இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு இருக்கும் ஆன்டி ‘ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முற்றிலும் தான் மட்டுமே காரணம். என்னுடைய சக போட்டியாளர்கள் அனைவருமே மிகவும் திறமையானவர்கள் மேலும் அவர்கள் அந்த இடத்திற்கு தகுதியானவர்களும் கூட.நான் இப்போது கடினமான நாட்களை எதிர்கொண்டு வருகிறேன் அதனால் என்னால் சரியாக இந்த நிகழ்ச்சிக்காக கவனம் செலுத்த முடியவில்லை. அன்றைய தினம் தன்னுடைய நாள் கிடையாது.தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் மீண்டும் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் சுற்றில் கம் பேக் கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement