யாருடன் நட்பு, காதல், திருமணம். தென்னிந்திய சினிமாவின் மூன்று விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா.

0
8342
rashmika-mandanna
- Advertisement -

“இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலம் அடைந்தவர். நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது.

-விளம்பரம்-
Image result for Rashmika About Three Vijay's

- Advertisement -

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நடிகை ராஷ்மிகா அவர்கள் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது நடிகை ராஷ்மிகா அவர்கள் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.

இதையும் பாருங்க : ஜேம்ஸ் வசந்தனுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா. ஆனால், இப்படி ஒரு பிரச்சனைகளா அவரது வாழ்வில்.

நடிகை ராஷ்மிகா அவர்கள் தமிழ் மொழி படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை தன் பக்கம் கட்டி இழுத்தவர். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் நடிகை ராஷ்மிகா அவர்கள் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது அவரிடம் ஒருவர் நீங்கள் எந்த நடிகரை காதலிக்க ஆசை படுகிறீர்கள், எந்த நடிகரை திருமண செய்ய ஆசை படுகிறீர்கள் என கேட்டு உள்ளார்.

-விளம்பரம்-
Image result for Rashmika About Three Vijay's

அதற்கு நடிகை ராஷ்மிகா கூறியது, நான் தளபதி விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசை, நட்பாக பழகுவதற்கு விஜய் தேவர்கொண்டா, காதல் செய்வதற்கு விஜய் சேதுபதி என்ற பிரபல நடிகர்கள் பெயரை வெளிப்படையாக கூறி இருந்தார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் அங்கேயே ஆரவாரம் செய்து பயங்கரமாக கொண்டாடினார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர் கூறிய பதிலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் தான் நடிகை ராஷ்மிகா திருமணம் குறித்து பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related image

மேலும், கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் பூஜைகள் எல்லாம் முடிந்து படத்தின் படப்பிப்பு தொடங்கி உள்ளார்கள். இதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தற்போது நடிகை ராஷ்மிகா அவர்கள் தெலுங்கில், கன்னடம், தமிழ் என அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertisement