பெரியாரிட் பேசுற சத்யராஜ் ஏன் லவ் டுடே படத்துல அப்படி பண்ணார்னு கேட்டாங்களா – தன்னுடைய சர்ச்சை கதாபாத்திரம் குறித்து ரோஹினி.

0
2088
- Advertisement -

சத்யராஜ் குறித்து நடிகை ரோகிணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரோகினி. இவர் ஆரம்பத்தில் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் நடிகை மட்டும் இல்லாமல் எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இதனிடையே இவர் தமிழ் சினிமாவின் வில்லன் ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள்.

- Advertisement -

விட்னஸ் வெப் சீரியஸ் சர்ச்சை :

பிரிவிற்கு பின் ரோகிணி தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ரோகினி அவர்கள் கதைப்போமா பர்வீன் சுல்தானா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவரிடம் விட்னஸ்’ மாதிரியான படத்துலயும் நடிக்கிறீங்க. இடஒதுக்கீட்டை எதிர்க்கின்ற, `என்னங்க சார் உங்க சட்டம்’ படத்துலயும் நடிக்கிறீங்களே எப்படி? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த ரோகினி, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்காக நடிக்கிறவர்களிடம் முழு கதையும் சொல்ல மாட்டார்கள். முழு கதையும் நான் கேட்கணும். இதுதான் சினிமாவில் நான் கற்றுக் கொண்ட பாடம்.

ரோகினி அளித்த பதில் :

ஒரு படத்தில் என்னுடைய போர்ஷன் மட்டும் தான் சொன்னார்கள். அதில் என்னுடைய கதாபாத்திரத்தை பார்த்தால் ஒரு பிற்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து வருகிற ஒரு பையனுக்கு நேர்காணலுக்கு வர முடியாத சூழ்நிலை. காணொளியின் மூலமாக முதல்வர் எதையாவது திறந்து வைக்கலாம் என்றால் ஒரு காணொளி மூலமாக இன்டர்வியூ பண்ணலாம். அப்படி என்றால் என்னுடைய கதாபாத்திரம் தான் இந்த இலக்கணத்தை உடைத்து அதை சாத்தியம்படுத்துகிறது.

-விளம்பரம்-

சினிமா அனுபவம்:

அது மட்டும் தான் நான் பார்த்தேன். இதுதான் எனக்கு சொல்லப்பட்ட கதை. ஆனால், நான் அங்கே போனதும் அதற்கு பிறகு இரண்டு டயலாக் பேச வைத்தார்கள். இதை எப்படி சொல்வது? எனக்கு சரி வராதுன்னு தோணுது? ஏன் இப்படி வைக்கிறீர்கள் என்று இதைப் பற்றி நிறைய பேசினேன். ஆனால், ஒரு இயக்குனர் சொல்ற பேச்சை தான் நாம் ஒரு ஆர்டிஸ்ட் கேட்கணும். பின் நான் அந்த இடத்தில் சரின்னு ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து விட்டேன். ஆனால், முதன்மைப்படுத்தப்பட்டது என்னவோ அந்த டயலாக் மட்டும்தான். அந்த இயக்குனர் இதை கால்குலேட் பண்ணி செய்திருக்கிறார் என்று எனக்கு தோன்றியது.

சத்யராஜ் குறித்து சொன்னது:

அதேபோல் லவ் டுடே படத்தில் சத்யராஜ் சார் பயங்கர ஆன்மீகவாதியாக நடித்திருந்தார். சார், நீங்க பெரிய ஆர்டிஸ்ட். வெளியே பெரியார் பற்றி பேசுறீங்க. ஆனால், இங்கு நாமம் வைக்கிறதை பற்றி பேசி இருக்கிறீர்கள். இப்படி அவரை நாம் கேள்வி கேட்கிறோமானா? இல்லை. என்னை மட்டும் கேள்வி கேட்கிறாங்க? இப்படி இருக்கும் போது எங்கேயோ ஒரு இடத்தில் என்னை ரொம்ப நம்புறாங்க என்று அந்த படத்திற்கு பிறகு தான் நான் புரிந்து கொண்டேன். இப்போது முழு கதையும் கேட்ட பிறகு தான் நடித்துக் கொண்டு வருகிறேன் என்று கூறினார்.

Advertisement