அட, அஸ்வின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளாரா. அதுவும் ஹீரோவுக்கு அண்ணனாக.

0
2621
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

-விளம்பரம்-
Ashwin Kumar (Cook With Comali 2) Wiki, Biography, Age, Movies, TV Shows,  Images - News Bugz

இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்துவும், தீபாவும் இதுவரை வெளியேறியுள்ளனர்.

- Advertisement -

இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அஸ்வின் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் இரட்டை வால் குருவி சீரியலில் நடித்தவர்.ஆனால் இவர் தொலைக்காட்சியில் மட்டுமல்ல படத்திலும் நடித்துள்ளார் அஸ்வின். தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தை தமிழில் ரீமேக் செய்து “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கிரிசாயா என்பவர் தான் ஆதித்ய வர்மா படத்தை இயக்கியவர்.

மேலும்,ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு ரதன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், பனிதா சந்து,ராஜா,அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் விக்ரம் மகனுக்கு அண்ணனாக நடித்துள்ளார் அஸ்வின்.

-விளம்பரம்-
Advertisement