‘தான் கடந்து வந்த பாதை குறித்து எழுதிய ரசிகை’ அஸ்வின் போட்ட ட்வீட். ஆறுதல் கூறும் அவரது ரசிகைகள்.

0
428
aswin
- Advertisement -

தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் என்ன பேசுகிறோம் என்பதே பேச தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வரும் அஸ்வின் பற்றி ப்ளூ சட்டை மாறன் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமானார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர்., தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பேசிய அவர், னக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன் என்று இவர் பேசிய பேச்சால் இவரை நெட்டிசன்கள் கடந்த இரன்டு நாட்களாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த அஸ்வின், தன் முதல் படம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாவும், யாரையும் குறை சொல்ல அப்படி பேசவில்லை என்றும் கூறி இருந்தார். அஸ்வினின் இந்த பேச்சை பல சினிமா பிரபலங்களும் விமர்சகர்களும் விமரித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக இதுகுறித்து வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அஸ்வின்.

அதில், இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்துவிட்டது நான் மிகவும் கஷ்டமாக இருக்கிறேன். நான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இல்லை என்றாலும் ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக இருந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று என்னுடைய முதல் படம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அங்கு போய் நின்றதும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன். நான் பேசிய கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று மிகவும் சோகத்துடன் தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அஸ்வினை பலர் கேலி செய்து வந்தாலும் அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார்கள். அந்த வகையில் டுவிட்டரில் ரசிகை ஒருவர் அஸ்வின் கடந்து வந்த பாதை குறித்து எழுதப்பட்ட பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இதை பார்த்து கையெடுத்து கும்பிடுவது போல ஒரு எமோஜி பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் அஸ்வினுக்கு ஆதரவாக அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Advertisement