அஸ்வின் கதை கேட்டு தூங்கிய 40 படங்களில் இதுவும் ஒன்றோ ? இப்போ அதில் நடித்து வரும் வாரிசு நடிகர்.

0
467
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.

-விளம்பரம்-
அப்போ Ashwin Hero இல்லையா? என்ன இப்படி ஆயிடிச்சு.. | kiruthiga udhayanidhi  | Cooku With Comali 2 - YouTube

இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக வர வேண்டும் என்பது தான் ஆசை. குக் வித் கோமாளி சீசன் 2 என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் அஸ்வின். அதனை தொடர்ந்து இவர் ஆல்பம் சாங், வெப் சீரிஸ் என்று நடித்து வருகிறார். மேலும், தற்போது அஸ்வின் அவர்கள் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பேசிய அவர், னக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன். இதுவரை நான் கேட்ட 40 கதைகளில் நான் தூங்கி விட்டேன். ஆனால், நான் தூங்காத ஒரு கதை தான் என்ன சொல்ல போகிறாய். அந்த கதை பிடித்துப்போய் நான் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன்.

This image has an empty alt attribute; its file name is 60bba8a1a104a.jpg

அஸ்வின் பேசியது சமூக வளைத்ததில் பெரும் கேலிக்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் அஸ்வின் தவறவிட்டுள்ள படம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க இருந்தது. ஆனால், இந்த படத்தில் இருந்து அஸ்வின் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஜெயராம் மகன் காளிதாஸ் கமிட் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

இதுகுறித்து கூறிய அஸ்வின், எனக்கு இந்த கதை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால், படக்குழு இதனை ஒரு வெப் சீரிஸ்ஸாக எடுக்க திட்டமிட்டனர். எனக்கு வெள்ளித்திரையில் வர வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் இந்த பிராஜெக்டில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று கூறி இருந்தார். தமிழ் சினிமாவில் சன் பிக்கர்ஸ் குழுமும் எவ்ளோவு பெரிய குழுமும் என்பது அனைவரும் அறிந்ததே அப்படி இருக்க அஸ்வின் இந்த படத்தை நிராகரித்தது அஸ்வினுக்கு பெரும் பாதகம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement