விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ் என்று நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து இருந்தார். அதே போல இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களிலும் இவர் சிறு ரோலில் நடித்து இருக்கிறார்.
இப்படி 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்தவர் அஸ்வின். இருந்தும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான் அஸ்வின் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீசன் மூலம் இவர் பலரது மனதையும் கவர்ந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக அஸ்வின் நடித்து இருந்தார்.
என்ன சொல்ல போகிறாய் படம்:
பின் இவர் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இயக்குனர் ஹரிஹரன் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று பலர் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தார். பின் பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகி இருந்தது.
அஸ்வின் நடிக்கும் புது படம்:
ஆனால், இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து இருந்தது. இவருடைய பேச்சை கேட்டு பலரும் கோபமடைந்து இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அஸ்வினின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் செம்பி. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிக்கிறார். இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா நடிக்கிறார்.
சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்:
இந்த படம் முழுக்க முழுக்க பஸ்ஸில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தின் தலைப்பும் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி இருந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் படம் குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் அஸ்வின் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் இருக்கிறார். அது என்னவென்றால், சமீபத்தில் அஸ்வின், “MYPEOPLE” நீங்கள் அனைவரும் என்னை ஆச்சரியப்படுத்த தவறவில்லை. நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் அவரை திட்டி விமர்சித்து வருகிறார்கள். ஏனென்றால், அஸ்வின் தன்னை பாலோ செய்யும் ரசிகர்கள் நிறைய பேரை பிளாக் செய்து வைத்திருக்கிறாராம்.
அஸ்வினை ரசிகர்கள் விமர்சிக்க காரணம்:
இப்படி இருக்கும் போது எப்படி நீ மக்கள் மீது பாசமாக இருக்கிறார் என்று பதிவு போடுகிறாய். ராணுவத்தை விட ஆணவத்துல அழிந்தவன் தான் அதிகம். அதை நீ கண்டிப்பாக பார்ப்பாய். பெரிய பிரபலங்கள் கூட இந்த மாதிரி செய்ய மாட்டார்கள். ஆனால், நீ இப்போ தான் ஆரம்பித்திருக்கிறாய் அதற்குள்ளே இப்படி எல்லாம் திமிர் பிடித்து பண்ணுகிறாயா? என்றெல்லாம் திட்டி பயங்கரமாக விமர்சித்து வருகிறார்கள். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு அஸ்வினின் பதில் என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.