அட, குக்கு வித் கோமாளி பாபா பாஸ்கர் ஜி வி பிரகாஷின் இந்த படத்தின் இயக்குனர் தானா.

0
697
baba
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நடன இயக்குனர்கள் படங்களையும் இயக்கியுள்ளனர். பிரபு தேவா, ராஜு சுந்தரம், ராபர்ட் என்று பலர் டான்ஸ் மாஸ்டர் என்பதை தாண்டி படங்களையும் இயக்கியுள்னர். அந்த வகையில் தற்போது குக்கு கோமாளி நிகழ்ச்சியில் அசத்தி வரும் பாபா பாஸ்கர் மாஸ்டரும் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷகீலா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, அஸ்வின், கனி, தீபா, பாபா பாஸ்கர் என்று பலர் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை மதுரை முத்து, தீபா, தர்ஷா என்று மூன்று பேர் வெளியேறியுள்ளனர். இந்த சீசனில் கோமாளிக்கு இணையாக படு ஜாலியாக இருப்பது மதுரை முத்து மற்றும் பாபா பாஸ்கர் தான்.

இதையும் பாருங்க : என்னது, காதலா ? பாலாஜி அவளுக்கு அண்ணன் மாதிரி – குடும்பத்தினர் அளித்துள்ள விளக்கம்.

- Advertisement -

பாபா பாஸ்கர் தமிழிலில், 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் பொல்லாதவன், வில்லு, வேட்டைக்காரன், சிறுத்தை, மாரி என்று பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் பாபா பாஸ்கர். மேலும், இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘குப்பத்து ராஜா’ படத்தை கூட இயக்கி இருக்கிறார். ஜி வி பிரகாஷ் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் பார்த்திபன், பூனம் பாஜ்வா, யோகி பாபு என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்றது.

நடன இயக்குனர், இயக்குனர் என்று பல திறமைகளை கொண்ட பாபா பாஸ்கர் தெலுங்கில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு முக்கிய காரணமே இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ளார். ‘தீ’ என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவர் நடுவராகப் பங்கேற்றதன் மூலம் அங்கு பிரபலமானார். மேலும், ‘கேஷ்’ என்ற தொலைக்காட்சி கேம் ஷோவிலும் இவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸில் கலந்து கொண்ட பாபா பாஸ்கர் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

-விளம்பரம்-
Advertisement