இதெல்லாம் நல்லது தான்.ஆனால், எதுக்கு போட்டோ எடுத்து போட்றீங்க – விமர்சனத்திற்கு தர்ஷா பதிலடி.

0
358
darsha

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது.  கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதிலும் கூலி வேலை செய்பவர்கள், ரோட்டோரம் வசிக்கும் மக்கள் என்று பலர் அன்றாட உணவிற்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு பல்வேரு தன்னார்வலர்களும் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் குக்கு வித் கோமாளி போட்டியாளரும் நடிகையுமான தர்ஷா தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

- Advertisement -

சாலையோரம் இருக்கும் மக்களுக்கு தேடி சென்று போய் உணவுகளை அளித்து வருகிறார் தர்ஷா. கடந்த சில நாட்களாக இந்த உதவியை செய்து வரும் தர்ஷா அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்து பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் இதனை விளம்பரம் என்று விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், இது நல்ல விஷயம் தான் ஆனால் , அத ஏன் போட்டோ எடுத்து போட்றீங்க ? என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த தர்ஷா, என் ரசிகர்களை ஊக்குவிக்கத் தான். என்னை பார்த்து பலர் செய்கிறார்கள். நல்ல விஷயத்தை எல்லா இடத்திலும் பரப்புவோம். அதன் மூலம் பலர் பயனடைவார்கள் என்று கூறியுள்ளார். குக்கு வித் கோமாளிக்கு முன்னர் ஒரு சில சீரியல்களில் நடித்த தர்ஷா, தற்போது திரௌபதி இயக்குனர் மோகன் இயக்கி வரும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement