குக் வித் கோமாளி சீசன் 3-யில் புகழ் இருக்காரா இல்லையா? தாமுவின் பதில்.

0
442
pugazh
- Advertisement -

குக்கு வித் கோமாளி சீசன் 3 யில் புகழ் வருவாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தாமு. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-63-1024x558.jpg

மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக காமெடி செய்து வந்தனர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்கள் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

குக்கு வித் கோமாளி 3 :

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. மேலும், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளியின் சீசன் 3 எப்போது வரும்? என்று பலரும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டும் கேட்டும் வந்தார்கள். தற்போது குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் ஆரம்பம் ஆகிறது. இதற்கான புரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

புகழ் ரசிகர்கள் அதிருப்தி :

மேலும், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி குறித்து புரோமோ வெளியானதைத் தொடர்ந்து பலரும் தங்களுடைய சந்தோஷத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அதில் மிக முக்கியமாக இந்த ப்ரோமோவில் புகழ் இல்லாததை கண்டு பலரும் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர் தாமு இந்த ப்ரோமோவை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

தாமு சொன்ன பதில் :

அந்த பதிவில் பலரும் இந்த சீசனில் புகழ் வருவாரா இல்லையா என்று தான் பெரும்பாலும் கேட்டு வந்தனர். அதில் ஒரு ரசிகர், தாமு சார் புகழ் அண்ணா வருவாங்களா ப்ளீஸ் சொல்லுங்க என்று கேட்டு இருந்தார். அதற்கு அவர், ”குக் வித் கோமாளியில் கண்டிப்பாக  புகழ் இருப்பார். 100% இது உண்மை ‘’ என்று  ரிப்ளை செய்துள்ளார்.  இதை பார்த்த புகழ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செஃப் தாமுவின் ரிப்ளை..

புகழுக்கு குவியும் சினிமா வாய்ப்புகள் :

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை இரண்டு சீசன்களை கடந்து இருக்கிறது. இதில் எத்தனையோ கோமாளிகள் வந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கோமாளி என்றால் புகழ் தான். குக்கு வித் கோமாளி சீசன் 2விற்கு பின்னர் புகழ் பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்திலும் புகழ் நடித்துள்ளார்.

Advertisement