குக்கு வித் கோமாளி புகழா இது ? அவரை முடி இல்லாமல் இது வரை பார்த்துள்ளீர்களா ? இதோ வீடியோ.

0
1785
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது.

-விளம்பரம்-

தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் பரவியிருப்பது நம்ம புகழ் தான். குக்கூ வித் கோமாளி புகழ் என்று சொன்னதும் நம் நினைவில் முதலில் வருவது அவருடைய ஹேர் ஸ்டைலை தான. ஆனால் இவரது முடியால் இவர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறார். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற புகழ்நான் கலக்கப்போவது யாரு சீசன் 6க்கு ஆடிசனில் கலந்து கொண்டேன். ஆனால், நான் ஆடிஷனிலேயே எலிமினேட் ஆகி விட்டேன். அதற்கெல்லாம் காரணம் என் முடி தான் என்று நினைத்து நான் மொட்டை அடித்துக் கொண்டேன்.

- Advertisement -

மீண்டும் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதில் என்னை எலிமினேட் பண்ணிட்டாங்க. இதனால் நான் மிகவும் மனமுடைந்து போய் விட்டேன்.அதற்கு பிறகு நான் என் சொந்த ஊருக்கு வந்தேன். பின் கணினி சம்மந்தமான வேலைகளை கற்றுக் கொண்டேன்.. கலக்கப்போவது யாரு சீசன் 5 முடிந்த பிறகு அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தாமஸ் அவர்கள் எனக்கு லேடி கெட்டப் கொடுத்தாங்க. அப்படியே லேடி கெட்டப் மூலம் தான் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படி நிலையில் வீடியோ ஒன்றில் பேசியுள்ள புகழ், முன்பெல்லாம் நான் ஏர்போர்ட்டுக்கு வந்தால் என்ன புகழ் எப்படி இருக்கிறீர்கள் என்று ஜாலியாக பேசுவார்கள். ஆனால் இப்போ நான் வந்தபோது என்னிடம் ஆதார் கார்டை கேட்டார்கள் என்று காண்பித்தேன். அதை பார்த்து விட்டு , முடி ஏன் வளர்ந்திருக்கிறது என்று ஒரு மணி நேரம் கேட்டு என்னை ஒக்கார வைத்து விட்டார்கள். அனைவரும் ஆதார் கார்டில் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள் என்று கூறியிருக்கிறார் புகழ்.

-விளம்பரம்-
Advertisement