சிம்புவை பார்த்து உடல் எடையை குறைந்துள்ள குக்கு வித் கோமாளி புகழ். எப்படி ஆகிட்டார் பாருங்க.

0
13711
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் பரவியிருப்பது நம்ம புகழ் தான்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ். கடலூரை சேர்ந்த இவர் வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கிறார் அப்போது இவரை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இருக்கிறார்கள் அதன் பின்னர் இவர் கடையில் வேலை செய்து இருக்கிறார் பின்னர் வாட்டர் வாஷ் கடையில் கூட வேலை செய்து இருக்கிறார்.

- Advertisement -

அந்த சமயத்தில் இவருக்கு பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் உடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். செட்டில் அனைவரிடமும் இவர் கலகலப்பாக பேசுவார் அதன்மூலம் இவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அது இது எது, சிரிச்சா போச்சு என்று பல நிகழ்ச்சி மூலம் தனது வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் புகழ்.

புகழ் என்று சொன்னதுமே முதலில் நினைவுக்கு வருவது அவரது சுருளை முடி தான் அதன் பின்னர் இவரது பப்ளிக் ஆன தோற்றமும் நினைவுக்கு வரும் இப்படி ஒரு நிலையில் இவர் உடல் எடையை குறைத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் பழைய போட்டோவில் பருமனாக இருந்த இவர் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உடல் எடை மெலிந்து காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் புகழ் நடிகர் சிம்புவை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து உடல் எடையை குறைத்து உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement