கணவரின் பிறந்தநாள் – ‘வீரா’ பட மீனா பாணியில் ஏற்பாடுகளை செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ள மணிமேகலை. வீடியோ இதோ.

0
4717
manimegalai
- Advertisement -

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : ஒரு வார்த்தை போடாததால் அர்த்தம் மாறியது. மன்னிப்பு கேட்ட நடிகை குஷ்பூ.

- Advertisement -

மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.இடையில் கொஞ்சம் சின்னத்திரையில் பிரேக் எடுத்துக்கொண்ட மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிர்சஸ் சின்னத்திரை ‘ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மேலும், சமீபத்தில் நிறைவடைந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

தற்போது கொரோனா பாதிப்பினால் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா முதல் சின்னத் திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஊரடங்கு உதவிற்கு முன்பாகவே கிராமத்திற்க்கு சென்ற மணிமேகலை தற்போது ஊரடங்கு உத்தரவால் கிராமத்தில் ஜாலியாக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : என் பையனுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கும். நீ கெடுத்துட்டியேனு சொன்னாங்க விக்ரம் மனைவி – இயக்குனர் பகிர்ந்த செம தகவல்.

-விளம்பரம்-

கிராமத்தில் மாடு மேய்ப்பது, தாயம் விளையாடுவது என்று ஜாலியாக இருந்து வருகிறார் மணிமேகலை. இந்த நிலையில் மணிமேகலையின் கணவர் ஹுசேன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது காதல் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி மணிமேகலை வீடியோ ஒன்றை பதவிட்டுள்ளார். அதில் வீரா படத்தில் வரும் மலைக்கோவில் வாசலில் வரும் பாடலை போல அகல் விளக்கு ஏற்றி வித்யாசமாக பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார் மணிமேகலை.

Advertisement