குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் மோனிஷா பிளசி. இவர் சிறிது நாட்களுக்கு முன் வந்த வெளிவந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருப்பார். இவர் தனது முதுகலை படிப்பில் பல்கலைகழகத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியை வெளிபடுத்தியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் நான் ஆரம்ப கால கட்டங்ககளில் நான்சுமாராகத்தான் படித்து கொண்டு இருந்தேன்.
ஏழாம் வகுப்பு வரை அப்படி தான் படித்து வந்தேன் அதன் பின் எட்டாம் வகுப்பிற்கு பிறகு தான் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸிலும் கலந்து கொண்டு அனைத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன் என்று அவர் கூறினார். மேலும் கூறிய அவர் ஜெயின்ட் ஜோசப் பள்ளியில் தான் எட்டாவது முதல் 10 வரை படித்தேன். அங்கு படிக்கும் காலத்தில் தான் நன் நிறையவற்றை கற்றுக்கொண்டேன் என்று கூறினார். பத்தாம் வகுப்பில் நான் 473 மதிப்பெண்களை பெற்றேன். அதன் பின் நான் முதலில் படித்த ஜெயின்ட் தாமஸ் பள்ளியில் சேர்ந்தேன்.
எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் அப்பா அதெல்லாம் செட் ஆகாது என்றார். நான் பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் சென்டம் எடுத்ததனால் அன்னை பயலாஜி குருப்பில் சேர்த்தார் ஆனால் எனக்கு சயின்ஸ் சுத்தமா வரல அதனால தான் 12 வகுப்பில் மதிப்பெண்ணும் குறைந்தது 833 என்றார். நான் 11 வது படிக்கும்போதே ஒரு நாள் வி.ஜே வாக ஆதித்தியவில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
தன் பின் கல்லூரியில் நான் விஸ்காம் குருப் எடுத்து படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் எல்லா பெரிய கல்லூரிகளிலும் ட்ரை பண்ணேன் ஆனால் கிடைக்கவில்லை. செயின் தாமஸ் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல விஸ்காம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.விஸ்காம் குரூப்ல பொண்ணுங்க கம்மியா இருப்பாங்க, எலெக்ட்ரானிக் மீடியா கம்யூனிகேஷன் எடுத்துப் படின்னு அப்பவும் என் அப்பா சொன்னார். அதனால விஸ்காம் எடுக்காம எலெக்ட்ரானிக் மீடியா எடுத்தேன். அங்க போனா 29 பசங்க, நான்தான் ஒரே பொண்ணுன்னு தெரிஞ்சது.
அது எனக்கு போக போக பழகிவிட்டது.அதன் பின் கலக்க போவது யாருல் கலந்து கொண்டேன் ஆனால் எனக்கு பி.ஜி படிக்க விருப்பமே இல்லை ஆனால் எனது துறை தலைவர் நீ கண்டிப்பா அத படிக்க வேணும் என்று அவரே பார்ம் வாங்கி கையில் கொடுத்துவிட்டார். பி.ஜி முடித்த பின் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது பல்கலைகழகத்தின் நீதான் முதல் மதிப்பெண் என்றார் அங்கு இருந்தும் அழைப்பு வரும் என்று கூறினார்.
அவர் சொன்னதும் வீட்ல எல்லாம் சொல்லிட்டேன். முதல்வர் கையால் வாங்குனேன்னு எதிர்பார்த்தேன் ஆனால் வெளியே சென்றுவிட்டார் .ஏன்னா என்னைப் பொறுத்தவரைக்கும் கோல்டு மெடல் வாங்குறவங்ககூட நானும் உட்கார்ந்திருக்கேங்கிறதே பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது!” என்றார்.