12 வருசமா அந்த கோவிலுக்கு போறேன், மேலும் அந்த குருக்கள் – சமீபத்தில் சர்ச்சையான வீடியோ குறித்து யோகி பாபு விளக்கம்.

0
2176
Yogibabu
- Advertisement -

கோயில் குருக்கள் குறித்து வெளிவந்த சர்ச்சைக்கு நடிகர் யோகி பாபு கொடுத்திருக்கும் விளக்கம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதலிடத்தில் இருக்கும். இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாமல் தற்போது இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளை பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் எல்ஜிஎம். இந்த படத்தை கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது யோகி பாபு நடித்திருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்தும் தொடர்ந்து யோகி பாபு பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவதையும் வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகர் கோயிலுக்கு சென்று இருக்கிறார்.

யோகி பாபு சாமி தரிசனம்:

அங்கு யோகி பாபுவை பார்த்து பக்தர்கள் பலரும் செல்பி எடுத்து இருக்கிறார்கள். அதன் பின் யோகி பாபு பூசாரியிடம் சென்று பேச கை கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அவர் யோகி பாபுவிற்கு கைகொடுக்கவில்லை. தற்போது இது தொடர்பான வீடியோவை தான் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பகிர்ந்து இப்ப எல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள் கேட்பவர்களுக்கு என்று கேப்சன் போட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள். யோகி பாபுவின் கையைப் பிடிக்க பூசாரி தவிர்த்து இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் யோகி பாபு கூறியிருப்பது, நான் பைக் வாங்கின காலத்தில் இருந்து தற்போது வரை 12 வருடங்களுக்கு மேலாக சிறுவாபுரி கோயிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

யோகி பாபு அளித்த பேட்டி:

அப்போதிலிருந்து எனக்கு அந்த குருக்களை தெரியும். ரொம்ப நல்ல மனிதர். என்னுடைய நலம் விரும்பி. அவர் கழுத்தில் போட்டிருந்த முருகர் டாலர் மாதிரியே நானும் ஒரு டாலர் வைத்திருந்தேன். இந்த டாலர் எங்க வாங்கினீங்க சாமி என்று அவரைப் பார்த்து கேட்டதற்கு எனக்கு பாரின்ல இருந்து வந்தது ராஜா என்று சொன்னார். அவர் கூட நான் கைகுலுக்க போகவே இல்லை. டாலர் பற்றி தான் விசாரித்தேன். அந்த வீடியோவை நல்லா பார்த்தால் தெரியும். அதன் பிறகு என்னை வாப்பா உட்காருப்பா என்று அழைத்து பத்து நிமிடம் பேசினார். அன்புடன் கட்டி அணைத்து வாழ்த்தி அனுப்பினார்.

நான் எப்பொழுது கோவிலுக்கு சென்றாலும் என்னிடம் அன்பாக தான் பேசுவார். ரொம்ப வருட பழக்கம். தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க எந்த கோயிலுக்கு சென்றாலும் குருக்கள் எல்லோருமே நன்றாக பேசுவார்கள். அந்த குருக்கள் மேல எந்த தவறும் இல்லை. வேண்டுமென்றே யாரோ இப்படி போட்டு தேவையில்லாத வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையாக என்ன நடந்தது என்று தெரியாமல் குருக்களை தவறாக விமர்சிக்க வேண்டாம். இதில் ஜாதி எல்லாம் பார்க்க வேண்டாம். கோயில் குருக்களால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை என்று கூறுகிறார்.

Advertisement