தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர். மேலும், அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி தனது சொந்த ரசிகர்களிடையேய வாங்கி கட்டிக்கொள்ளும் வழக்கமும் உடையவர்.
தெலுங்கில் பிரபல இயக்குனரான இவர் 1989ஆம் ஆண்டு நாகர்ஜுனா நடிப்பில் வெளியான சிவா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதன் பின்னர் இந்தி தெலுங்கு தமிழ் என்று பல்வேறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் மேலும் இவர் பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறார் தமிழில் திருடா திருடா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையும் பாருங்க : சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ள டிடி மற்றும் பிரியதர்ஷினி – 90ஸ் கிட்ஸ்க்கு கண்டிப்பா தெரியும்.
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா அடிக்கடி எதாவது சர்ச்சையான பதிவுகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் பலரின் வயிற்றெரிச்சலை தூண்டியுள்ளது. சமீப காலமாக இயக்குனர் ராம் கோபால் வர்மா படு கவர்ச்சியான படங்களை எடுத்து வருகிறார். இதற்காக பல இளம் நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் சோனியா நரேஷ் என்ற 27 வயது இளம் நடிகையின் தொடையில் முத்தம் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனை நைனா கங்குலி என்ற நடிகை தான் புகைப்படம்எடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் ராம் கோபால். கடந்த ஆண்டு தான் பெண்கள் இருவர் இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு, முதல் இருக்கையில் இருக்கும் பெண் மனிதனால் செய்யப்பட்ட நகைகளை அணித்துள்ளதாகவும் மேலும் பின்னல் இருக்கும் பெண் இயற்கையான அழகில் கவர்ச்சி உடையில் இருக்கிறார் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.