முன்னெல்லாம் மைக் வந்தா ஜாலியா பேசுவேன், ஆனா இப்போ – மேடையில் அடக்கி வாசித்த புகழ்(கூட்டாளிங்க பண்ணது எல்லாம் கண்ணு முன்னாடி வரும்ல)

0
399
santhanam
- Advertisement -

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் பிரஸ் மீட்டில் ஹீரோயின் குறித்து புகழ் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் புகழுக்கு உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

- Advertisement -

படங்களில் பிஸியான புகழ் :

இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து இருந்தார் புகழ். தற்போது இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்த வருகிறார்.

ஏஜென்ட் கண்ணாயிரம்:

அது மட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது புகழ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படத்தை வஞ்சகர் உலகம் படைத்த இயக்கிய மனோஜ் பீதா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இது தெலுங்கு மொழியில் வெளியாகி இருந்த ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் ரீமேக். இந்த படம் தெலுங்கு மொழியில் நல்ல வசூல் செய்திருந்தது. இதனை தற்போது தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

புகழ் அளித்த பேட்டி:

இந்த படத்தில் ரியா சுமன், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 25-ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழு உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது புகழ் கூறி இருந்தது, முதலில் எல்லாம் மைக்கை பிடித்தால் பேசிக் கொண்டே இருப்பேன். இப்போது மைக்கை பார்த்தாலே மயக்கமாக இருக்கிறது. ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்றி. நிறைய இடங்களில் சொல்லி இருக்கிறேன் சந்தானம் அண்ணா என் உடன்பிறவா சகோதரர்.

ஹீரோயினி குறித்து சொன்னது:

வஞ்சகர் உலகம் இயக்குனர் இந்த படத்தில் நடிக்க சொல்லி கேட்டிருந்தார். உடனே, நான் யார் ஹீரோ? என்று கேட்டவுடன் சந்தானம் என்று சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சபாபதி படத்தில் தான் அவருடன் நீண்ட காட்சிகளில் நடிக்கவில்லை. இந்த படத்தில் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதேபோல் இந்த படத்தில் ஹீரோயினிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ரொம்ப வொர்க் அவுட் ஆயிடுச்சு. அவர் ஒரு லாங்குவேஜ் பேசுவார், நான் ஒரு லாங்குவேஜ் பேசுவேன். படத்தில் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என்று பேசி இருந்தார்.

Advertisement