நீங்க தான் அடுத்த யோகி பாபுனு சொல்றாங்களே – பத்திரிகையாளர் கேள்விக்கு புகழ் சொன்ன பதில்.

0
1646
- Advertisement -

லியோ ட்ரைலர் குறித்து நடிகர் புகழ் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற காமெடி நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த முதல் இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

படங்களில் கலக்கும் புகழ் :

அதனைத் தொடர்ந்து அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய், அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து இருந்தார். மேலும், இவர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் புகழ். இதனிடையே புகழ், பென்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

புகழ் அளித்த பேட்டி:

பின் இவர்கள் கடந்த வருடம் கல்யாணம் செய்து கொண்டார்கள். சமீபத்தில் தான் புகழ் மனைவி பென்ஸிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு பலரும் புகழுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரெடி ஸ்டெடி போ என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது மட்டுமில்லாமல் படங்கள், நிகழ்ச்சிகள் என படு பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஈ-ஸ்பா நிறுவனத்தின் ஐந்தாவது கிளை துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் புகழ் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

புகழ் நடிக்கும் படம்:

இதனை அடுத்து இவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், கே.டி குஞ்சுமோகனின் ஜென்டில்மேன் 2, ஹாட்ஸ்டார்-க்காக விஜய் மில்டன் திரைப்படத்தில் நடிக்கிறேன், இன்னும் நான்கு படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். இதனை அடுத்து நிறைய நகைச்சுவை கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதேபோல் சந்தானத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன் என்று தன்னுடைய சினிமா கேரியர் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

லியோ குறித்து புகழ் சொன்னது:

அப்போது லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். உடனே புகழ், ட்ரைலர் தெரியவில்லை. அதில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் கெட்ட விஷயங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். நான் குழந்தை பிறந்த பிறகு பாப்பாவுடன் தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். லியோ ட்ரெய்லரை இன்னும் பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement