ஓராண்டிற்கு முன்னரே திருமணத்தை முடித்து இருக்கும் புகழ் – வைரலாகும் முதல் திருமண புகைப்படங்கள்.

0
455
pugazh
- Advertisement -

குக் வித் கோமாளி புகழுக்கு இது இரண்டாவது திருமணம் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தவர் புகழ். முதலில் இவர் மெக்கானிக் கடையில் வேலை செய்து பின் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருந்தார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த மூன்று சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

படங்களில் கலக்கும் புகழ் :

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய், அஜித்தின் வலிமை போன்ற படங்களில் புகழ் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக வெளிவந்த அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து இருந்தார்.

புகழ் காதலித்த நபர்:

மேலும், இவர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் புகழ். இதனிடையே புகழ், பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுகுறித்து புகழ் கூறி இருந்தார். இதனை அடுத்து பலரும் புகழின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். அனைவரும் எதிர்பார்த்த புகழின் திருமணம் சில திங்கங்களுக்கு முன்னர் தான் நடந்தது.

-விளம்பரம்-

புகழ் கல்யாணம்:

புகழ் மற்றும் பேன்ஸியின் திருமணம் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து புகழுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது புகழின் திருமணம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

புகழின் இரண்டாம் திருமணம் குறித்த சர்ச்சை:

புகழ் மற்றும் பென்சி ஆகிய இருவருக்குமே கடந்த ஆண்டு சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். அதாவது, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளராக ராமகிருஷ்ணன் என்பவரின் தலைமையில் புகழ் – பென்சி இருவரும் சுயமரியாதை முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது இவர்கள் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement