ஹீரோவானார் குக்கு வித் கோமாளி ரக்ஷன் – அட, கூட இந்த விஜய் டிவி பிரபலம் நடிக்கிறாராம்.

0
459
rakshan
- Advertisement -

விஜய் ரக்ஷன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினிக்கு இணையாக ஆண் தொகுப்பளர்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மிக பிரபலமான தொகுப்பாளராக ரக்ஷன் திகழ்கிறார். தொகுப்பாளரும், நடிகருமான ரக்ஷன் முதலில் ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தான் தொகுப்பாளராக இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் டிவி தான். விஜய் டிவியில் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. ஆகவே, விஜய் டிவி மூலம் தான் ரக்ஷன் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் துல்கர் சல்மான் நடித்து இருந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் மூலமாக ரக்ஷன் வெள்ளித்திரையில் நடிகராக மாறி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கு, படை பலத்துடன் நீதி மன்றத்தில் ஆஜரான சந்தானம். நீதிமன்றம் போட்ட உத்தரவு.

ரக்ஷன் குறித்த தகவல்:

அதற்கு பிறகு ரக்ஷனுக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் விஜய் டிவி பக்கமே வந்துவிட்டார். தற்போது ரக்ஷன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், 3 சீசன்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 3 சீசன்களிலும் ரக்ஷன் தான் தொகுப்பாளர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ரக்சன் புதிய படத்தில் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

ரக்சன் ஹீரோவாக நடிக்கும் படம்:

இந்த படத்தை இரா.கோ.யோகேந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ரக்ஷன் நடிக்கிறார். இந்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜை இன்று துவங்கி இருக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்ஷனின் தனித்துவமான நடிப்பு திறமை மூலம் அனைவரையும் கவர்ந்தார். தற்போது ரக்ஷன் நாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த படம் உணர்வுபூர்வமான காதல், நட்பு உறவுகளை மையமாகக் கொண்டு அனைவரும் ரசிக்கும் கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மலையாளத்தின் பிரபல இசை அமைப்பாளர் சச்சின் வாரியர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். தாமரை பாடல் வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Advertisement