தாலி கட்டும் போது இப்படி தான் கட்டணும் , கலாய்த்த வருங்கால மனைவி – புகழ் வெளியிட்ட வீடியோ.

0
683
Pugazh
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 123-1.jpg

இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் புகழ் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : இந்தி மொழி சர்ச்சை – பாரதிதாசன் வரிகளுடன் ஏர்.ஆர்.ரகுமான் பதிவிட்ட புகைப்படம் படு வைரல். (அமித் ஷாவிற்கு பதிலடியா ? )

- Advertisement -

படங்களில் பிஸியான புகழ் :

இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்துஇருந்தார் புகழ். சமீபத்தில் தான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவ்வப்போது மட்டும் வந்து சென்று வருகிறார் புகழ்.

புகழ் காதலி பென்சி:

அதுவும் கடந்த சில மாதங்களாக இவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அதிகம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இது குறித்து ரசிகர்கள் பலரும் யார் இவர்? உங்கள் வருங்கால மனைவி யா? லவ்வரா? அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட கேர்ள் பிரண்டுடன் பைக் ரைட் என்று புகழ் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதில் புகழின் முதுகில் இருந்து ஒரு கை மட்டும் தெரியும். அந்த பதிவில் அவர் மிஸ் யூ பார்ட்னர் என்று புகழ் பதிவிட்டு இருந்தார். இதை எல்லாம் வைத்து பார்த்தால் அப்போது அந்த நபர் இவர்தானா? என்றும் கேட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

ஐந்து வருட காதல் :

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய புகழ், ஐந்து வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும்போது இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம் என்று கூறி இருந்தார்.

வருங்கால மனைவியுடன் வெளியிட்ட வீடியோ :

இப்படி ஒரு நிலையில் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியுடன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான்லா தாலி கட்டும் போது என் புருஷன் எட்டி தான் கட்டணும், அப்படி நிமிந்து ஒக்காந்துட்டு இருப்பேன். ஆம்பளைங்களுக்கு வெக்கமா இருந்தா அவங்க குனிஞ்சிக்கிட்டோம் என்று புகழ் காதலி சொல்ல, ஆமா, பார்ட்னர் நீ நல்லா நிமிந்தே உக்காரு என் பொண்டாட்டி அப்படி தான் இருக்கனும் என்று வசனத்தை பேசி இருக்கிறார் புகழ்.

Advertisement