சீசன் 3யில் புகழ் இல்லையா ? போட்டியாளர்கள் யார் ? குக்கு வித் கோமாளி இயக்குனர் பேட்டி.

0
398
cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருந்தது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக காமெடி செய்து வந்தனர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்கள் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. மேலும், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளியின் சீசன் 3 எப்போது வரும்? என்று பலரும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டும் கேட்டும் வந்தார்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளியின் இயக்குனர் :

தற்போது குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் ஆரம்பம் ஆகிறது. இதற்கான புரோமோ வெளியாகியிருக்கிறது. மேலும், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி குறித்து புரோமோ வெளியானதைத் தொடர்ந்து பலரும் தங்களுடைய சந்தோஷத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் பார்த்திபன் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியது, சமையல் தெரிந்தவர்களுக்கு சமையல் தெரியாதவர்கள் உதவி செய்யணும். அதுதான் இந்த நிகழ்ச்சியை உடைய கான்சப்ட்.

பார்த்திபன்

அதனால் வேண்டும் என்று அவர்களுடைய சமையலைக் கெடுத்து விடுவது என்பது எல்லாம் நிகழ்ச்சியின் நோக்கம் இல்லை. இது ஒரு முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சி. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும் போது பெரியளவில் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், நிகழ்ச்சி தொடங்கியதும் என்ன தோன்றியதோ அதை தான் நாங்கள் செய்தோம். முதல் சீசனில் முதல் எபிசோடை முடித்து நாங்கள் ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருந்த தருணத்தில் நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பு கிடைத்தது.

-விளம்பரம்-

கோமாளிகளை சினிமாவில் தூக்கிவிட்ட நிகழ்ச்சி :

மக்களுக்கு இந்த நிகழ்ச்சி ரொம்பவும் பிடித்து விட்டது என்பதை புரிந்துகொண்டோம். அப்படியே மக்களுக்கு வித்தியாசம் வித்தியாசமாக கொடுக்கணும் என்று தொடங்கினோம். அதேபோல் நாங்கள் கொடுத்த ஒவ்வொரு எபிசோடும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. குக் வித் கோமாளியின் நிகழ்ச்சிக்கு பின்னும் பலருடைய உழைப்பு இருக்கு. எல்லாருடைய உழைப்பிற்கான பலன் தான் இப்போது கிடைத்திருக்கு என நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு. மேலும், எங்களுடைய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்களுடைய வாழ்க்கை அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

Cooku with Comali - Watch Episode 25 - Celebration Week on Disney+ Hotstar

புகழ் இல்லையா ? வரமாட்டாரா ? :

அது மட்டும் இல்லாமல்சீசன் 2 செலிப்ரேஷன் நேரத்தில் புகழால் வரமுடியவில்லை. நிறைய பேர் அவரை மிஸ் பண்ணதாக தான் என்னிடம் சொன்னார்கள். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நாங்களும் புகழை அதிகமாக மிஸ் பண்ணோம். அதேபோல் இந்த மூன்றாவது சீசனும் எல்லோரும் எதிர்பார்த்ததை விட அதிகமான என்டர்டைன்மென்ட், ஜாலி, காமெடி இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும், குக் வித் கோமாளி சீசன் 3 புரோமோ வில் சிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மட்டும் இருந்தார்கள். புகழ் ப்ரோமோவில் வரவில்லை. அதனால் அவர் இந்த சீசனும் வரமாட்டார் என்பது தெரியவருகிறது. அவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இருந்தாலும் நேரம் கிடைக்கும் நேரத்தில் நிச்சயம் போட்டியில் சிறப்பு விருந்தினராக புகழ் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement