அவள் உடம்பில் பிரச்சனை இருந்தது உண்மைதான், ஆனால் – உமாவின் மரணம் குறித்து அவரின் அக்கா வனஜா சொன்ன உண்மை.

0
1366
uma
- Advertisement -

பட்டி தொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனஜா. விஜய் தொலைக்காட்சியில் மூலமாகத் தான் இவர் சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதன்பின் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதுமட்டுமில்லாமல் படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் வனஜா நடித்திருக்கிறார். மேலும், இவருடைய தங்கை தான் மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமாமகேஸ்வரி. உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் உமா உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

உமா அக்கா வனஜா :

மேலும், இவருடைய இறப்பு குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகளும் சர்ச்சைகளும் வந்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து உமாவின் அக்கா வனஜா அவருடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் என்னுடைய சேனலில் உமாவை பேட்டி எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எதார்த்தமான கலந்துரையாடல் மாதிரி அந்த பேட்டியை எடுத்து சேனலில் வெளியிட வேண்டும் என்று நான் ரொம்ப நாளாக நினைத்திருந்தேன். இதுபற்றி நான் அவளிடமும் பேசியிருந்தேன்.

- Advertisement -

வனஜாவின் ஆசை :

ஆனால், பொதுவாகவே அவளுக்கு அவளைப்பற்றி விஷயங்கள் வெளியே தெரியக்கூடாது என்று நினைப்பாள். இருந்தாலும் நான் கேட்டதனால் அவளும் சரி என்று ஒத்துக் கொண்டாள். பின் அவளுடைய உடம்பு சரியானதும் இதை பண்ணிக்கொள்ளலாம் என்று நாங்கள் முடிவு செய்து இருந்தோம். ஆனால் அதற்கு முன்னாடி அவள் எங்களை விட்டு சென்றுவிட்டாள். இப்படி ஒரு நிலையில் அவளைப்பற்றி வீடியோ பண்ணுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

Metti Oli Serial Actress Uma Death Reason By Actress Revathi

குழந்தை இல்லாததால் பிரச்சனையா :

மேலும், இன்னமும் உமா எங்களுடன் இருக்கிறதாக தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உமா சின்ன வயதில் இருந்தே இது எனக்கு பிடிச்சிருக்கு பிடிக்கலை என்று ஓப்பனாக பேச மாட்டாள். அவளுடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக தான் இருந்தது. ஆனால், குழந்தை இல்லை என்கிற வருத்தம் மட்டும் தான் அவளுக்கு இருந்தது. குழந்தைக்காக அவர்கள் இருவரும் மருத்துவ பரிசோதனையும் செய்தார்கள். ஆனால், எந்த பிரச்சனை இல்லை என்பதும் தெரிந்தது.

-விளம்பரம்-

மஞ்சகாமலை பிரச்சனை :

இருந்தாலும் இரண்டு பேருமே சந்தோஷமாக தான் அவர்களுடைய வாழ்க்கையை நடத்தினார்கள். அவள் ஆசைப்பட்ட மாதிரி அவருடைய வாழ்க்கையும் அமைந்தது. அவளுக்கு இருந்த மஞ்சகாமலை பிரச்சனை எல்லோருக்கும் தெரியும். அதற்காக அவள் டிரீட்மென்ட் மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால். பின் அது குணமாகிவிட்டது. இருந்தாலும் அது அவளுடைய உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? என்னவென்று எங்களுக்கு புரியவில்லை. மருத்துவமனையில் இருந்து அவள் வீட்டுக்கு செல்லும்போது பல கனவுகளுடன் தான் சென்றார்.

கணவருடன் 'மெட்டி ஒலி' உமா

இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் :

மேலும், இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் உடம்பெல்லாம் சரியாகி விட்டது. அதனால் பல இடங்களுக்கு டிராவல் பண்ணனும் என்று சொல்லியிருந்தார். ஆனால், கடவுள் அவளை சீக்கிரமா கூட்டிட்டு போயிட்டாரு. என் கண் முன்னாடியே அவள் இருப்பாள் என்று நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க வில்லை. நான் இப்படி இருப்பதற்கு போய் சேர்ந்து விடலாம் என்று சொல்லியிருக்கா. அந்த அளவிற்கு அந்த வலி அவளை கொன்றது. உமா ஆத்மா சாந்தி அடையனும் தான் நான் தினமும் கடவுளிடம் வேண்டுகிறேன்.

அவள் உடம்பில் பிரச்சினை இருந்தது உண்மைதான்

அதே போல் அவளுடைய உடல் நிலை குறித்து பல வதந்திகள் சோசியல் மீடியாவில் வந்துகொண்டுதான் இருக்கிறது. அவள் உடம்பில் பிரச்சினை இருந்தது உண்மைதான். அது என்ன என்று கண்டு பிடிப்பதற்கு முன்னாடியே அவள் மனம் உடைந்து விட்டாள். அதே போல் மஞ்சகாமலை ட்ரீட்மெண்ட் எடுத்தும் சரியாகிவிட்டது என்று நினைத்தோம். ஆனால், அவளுடைய உடம்பு பூரண குணம் அடைய வில்லை. அதேபோல் அவளைப் பற்றி வரும் பல தகவல்களும் வதந்தியே, உண்மை இல்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement