இந்த சீஸனின் முதல் Non-veg டாஸ்க், டேஞ்சர் சோனுக்கு வந்த ஷிவாங்கி – கடைசியில் வெளியேற்றப்பட்டது இவர் தான்.

0
783
cooku
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து நான்காவதாக எலிமினேட் ஆகியிருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, மைம் கோபி, ஆண்ட்ரியான், ராஜ்ஐயப்பா, பாக்கியலட்சிமி VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் உட்பட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இந்த முறை சிவாங்கி போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார். மேலும், இதுவரை இந்த சீசனில் 20 எபிசோடுகள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை கிஷோர், காளையன், ராஜ் ஐயப்பன் மற்றும் vj விஷால் ஆகியோர் எலிமினேட் ஆகியிருக்கிறார்கள்.

இந்த சீஸனின் இம்யூனிட்டி சுற்றுகடந்த வாரம் நடைபெற்றது. இதில் இம்யூனிட்டியை வென்ற நபர் அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்துவிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மற்ற சீசன்களில் இருந்து வந்துள்ள மூன்று போட்டியாளர்களில் யாரவது ஒருவர் இம்யூனிட்டியை வென்றுவிட்டால் சீசன் 4ல் உள்ள அனைத்து போட்டியாளர்களும் அடுத்த வாரம் நேரடியாக எலிமினேஷன் சுற்றுக்கு செல்வார்கள் என நடுவர்கள் அறிவித்தார்கள்.

-விளம்பரம்-

இந்த இம்யூனிட்டி டாஸ்கில் இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் யாராவது வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் முன்னாள் போட்டியாளரான ஷகிலா இம்யூனிட்டி டாஸ்கி வென்றார். இதனால் இந்த சீசனில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் எலிமினேஷன் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்கள். இந்த நிலையில் இன்று நடைபெற்ற டாஸ்கில் போட்டியாளர்களுக்கு நான் வெஜ் சமைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஷிவாங்கிக்கு மட்டும் தான் நான் வெஜ் என்றால் பிடிக்காது. இருப்பினும் கடந்த வாரத்தை போல் நடுவர்களிடன் வாக்கு வாதம் செய்யாமல் இந்த டாஸ்கை செய்தார் ஷிவாங்கி.இருப்பினும் முதல் சுற்றில் அவர் சரியாக சமைக்கவில்லை. இதனை தொடர்ந்து எலிமினேஷன் சுற்றில் ஷெரின், ஷிவாங்கி, ஸ்ருஷ்டி ஆகிய மூவரும் இடம்பெற்றனர். இதில் ஷெரின் வெளியேற்றப்பட்டார்.

Advertisement