குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கிய நிலையில் முன்னாள் நடுவரான வெங்கடேஷ் பத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிப்பது தான் விஜய் டிவியுடன் வழக்கம். அந்த வகையில் இந்த சீசன் வரும் 27 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீஸனின் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மத்தம்பட்டி ரங்கராஜ் தாமுவுடன் நடுவராக இணைந்து இருக்கிறார்.விஜே ரக்சன், மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள்.
CWC சீசன் 5 :
அதேபோல் இதுவரை வந்த சீசனங்களில் கலந்து கொண்ட கோமாளிகளின் சிலர் இந்த சீசனிலும் வருவார்கள்.புது கோமாளிகளும் இருப்பார்கள் என்று கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் என்று புது கோமாளிகள் இணைந்துள்ளனர். அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஒரு சில விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
போட்டியாளர்கள் லிஸ்ட் :
இந்த சீசனில் ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். நேற்று இந்த சீஸனின் முதல் சீசன் நேற்று கோலாகலமாக துவங்கியது.
பட் வெளியிட்ட வீடியோ :
இப்படி ஒரு நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வெங்கடேஷ் பட் ‘ எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் அனைவரும் என்னை மிஸ் செய்வது நீங்கள் அனைவரும் எனக்காக அனுப்பிய மெசேஜ் இதையெல்லாம் பார்க்கும் போது நான் மிகவும் கொடுத்து வைத்தவன். கடவுள் என்னை ஆசீர்வதித்து இருக்கிறார் என்று தோன்றுகிறது மிகவும் நன்றி உங்களை என்றும் ஏமாற்ற மாட்டேன் என்றும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
சன் டிவி நிகழ்ச்சி :
என்னுடைய வாழ்வின் துடிப்பே நீங்கள்தான் உங்களுக்காக ஏண்டில் இருந்து காலை 8 மணி சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது எட்டு மணி முதல் சன் டிவி பாருங்கள் உங்களுக்கு அது தெரிய வரும்’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே வீடியோ ஒன்றில் பேசிய வெங்கடேஷ் பத் ‘ எனக்கு இதைவிட மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதனால் தான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகயதாக கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.