‘அடக்கி வாசிக்கவும்’ கோட் படக்குழுவுக்கு விஜய் கொடுத்த கட்டளை – என்ன காரணம் தெரியுமா?

0
507
- Advertisement -

விஜயின் கோட் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

-விளம்பரம்-

விஜய் கோட் படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கோட் G.O.A.T Greatest of all time என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

- Advertisement -

விஜய் கோட் படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை இந்த நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. விஜயை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதி இருந்தது. படப்பிடிப்பிற்கும் நடுவில் விஜய் ரசிகர்களை சந்தித்திருந்தார். தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தினுடைய பாடல்கள் சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் அரங்கம் அமைத்து எடுத்தார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என்றும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது பக்ரைன் நாட்டில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கோட் படத்தினுடைய மொத்த படபிடிப்பு முடிந்த பிறகு தான் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு டீ-ஏஜிங் டெக்னாலஜிக்கான வேலைக்கு அனுப்பப்படுகிறது. பின் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோட் படத்தின் டீசர் அல்லது முதல் சிங்கிள் லிரிக் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

முதல் பாடல் வெளியீடு:

சோசியல் மீடியா முழுவதும் கோட் பட பாடல் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பிடும் வகையில் இந்த பாடல் வரிகள் அமைந்து இருக்கிறது. அதிலும் பாடலின் கடைசி 50 நொடிகள் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மூவரும் ஆடி இருக்கும் டான்ஸ் தியேட்டரில் நிச்சயம் தெறிக்கவிட போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

படம் குறித்த அப்டேட்:

இந்த நிலையில் ‘தி கோட்’ படத்தை சொன்னதைவிடச் சிறப்பாக எடுத்திருக்கிறாராம் இயக்குநர் வெங்கட் பிரபு. அவருக்கே உரிய விளையாட்டுத்தனம், காமெடி உள்ளிட்ட விஷயங்களுடன் ஆக்‌ஷன் ஏரியாக்களிலும் தூள் கிளப்பியிருக்கிறாராம். எடுத்தவரையிலான காட்சிகளை ரஃப் எடிட்டில் பார்த்த விஜய்க்கு செம ஹேப்பியாம். ஆனாலும், படத்தின்மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறாராம் விஜய். ‘அடக்கி வாசிக்கவும்’ எனப் படக்குழுவுக்கும் கட்டளை போடப்பட்டிருக்கிறதாம்.

Advertisement