உங்க Fans எதுக்கு எங்க சாம் விஷாலா திட்றாங்க சொல்லுங்க ? கேள்வி கேட்டவருக்கு ஷிவாங்கி கொடுத்த பதில் (இத ஏன் டெலீட் பண்ணிட்டாங்க)

0
2167
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வந்த கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருந்தது . சொல்லப்போனால் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து இருந்தது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து இருந்தார்.

இதையும் பாருங்க : ‘100 நாள் உன்ன பாக்காம’ – பிக் பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளருக்கு வெங்கட் பிரபு போட்ட டீவீட்.

- Advertisement -

பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான ஷிவாங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆனார். மேலும், இவர் சூப்பர் சிங்கர் போட்டியாளரான சாம் விஷாலை காதலித்து வருவதாகவும் வதந்திகள் பரவியது.

ஆனால், உண்மையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். இப்படி ஒரு நிலையில் சாம் விஷாலை, ஷிவாங்கியின் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருவதாக சாம் விஷால் ரசிகர்கள் ஷிவங்கியை டேக் செய்து கமன்ட் செய்து இருந்தனர். இதற்கு பதில் அளித்த ஷிவாங்கி, நான் பதிவிடுவது அனைத்தும் எனக்காகத்தான் பதிவிடுகிறேன். இதற்கும் மற்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

-விளம்பரம்-

எனக்கு ஏதாவது பிடித்து விட்டால் அதை உடனே உங்களிடம் ஷேர் செய்து விடுவேன். இந்த தேவையில்லாத வெறுப்புகள் தேவை கிடையாது. காரணமே இல்லாமல் வெறுப்பது உங்கள் பொன்னான நேரத்தை வீன் அடிப்பதற்கு சமம் என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், இந்த பதிவை நீக்கி விட்டார் ஷிவாங்கி. இவரின் இந்த பதிவிற்கு இவரது ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement