மன அழுத்தத்தில் இருந்து ரசிகை மீள காரணமாக இருந்த Cwc குரேஷின் அந்த ஒரு கெட்டப் (இந்த கெட்டப் செம ஹிட்டாச்சே)

0
271
kureshi
- Advertisement -

மன அழுத்தத்திலிருந்த ரசிகை ஒருவர் குக் வித் கோமாளி குரேஷியின் காமெடி மூலம் மாரி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்றாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

- Advertisement -

இதையும் பாருங்க : கேன்சர் பயம், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவிற்கு நடந்த திடீர் ஆப்ரேஷன். என்ன ஆனது தெரியுமா ?

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி :

இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருத்திகா என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியின் இறுதி கட்டம்:

வழக்கம் போல் கோமாளியாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் போன்ற பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி பல கட்டங்களைக் கடந்து சென்று இருக்கின்றது. இப்போது நிகழ்ச்சியில் தர்ஷன், அம்மு அபிராமி, ஸ்ருதிக்கா, வித்யுலேகா ஆகியோர் மட்டும் இருக்கின்றன. கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சி பைனல்ஸ் செல்ல இருக்கிறது.

குரேஷி குறித்த தகவல்:

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக பலர் இருக்கின்றனர். ஆனால், புகழ் இல்லாத குறையை இந்த சீசனில் குரேஷி தீர்த்து வைத்து வருகிறார். இந்த சீசன் மூலம் குரேஷிக்கு பயங்கர ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக ஸ்ருத்திகா போல் குரேஷி போட்ட கெட்டப் எபிசோடு டி ஆர் பியில் எகிறியது. இந்த எபிசோடு வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ஹிட் கொடுத்திருந்தது. இந்நிலையில் ஸ்ருத்திகா போல் குரேஷி டிரஸ் செய்து கொண்டு பேசி, ஆடி கலக்கும் இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் ஒன்று செய்திருக்கிறார்.

ரசிகர் செய்த மெசேஜ்:

அதில் அவர், ஸ்ருத்திகா போல் கெட்ட போட்ட எபிசோட்டை நான் 100 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்த என்னை இந்த எபிசோடு அப்படியே மாற்றி விட்டது நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த மெசேஜை பார்த்த குரேஷிஅப்படியே சோசியல் மீடியாவில் ஷேர் செய்து ஸ்ருத்திகாவை டேக் செய்து அனைத்துப் புகழும் ஸ்ருத்திகாவை சேரும் என்று பதில் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement