‘அது வேற வாயி, இது நார வாயி’ – அசல் கோளாறு குறித்து மாறி மாறி பேசி மாட்டிக்கொண்ட கூல் சுரேஷ். இதோ வீடியோ.

0
339
cool
- Advertisement -

அன்று அசல் கோளாறை விமர்சித்துவிட்டு தற்போது அவருக்கு ஆதரவாக கூல் சுரேஷ் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்து வாரங்களை கடந்து இருக்கிறது. முதல் நாளே 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வயிற்றுக்காடு போட்டியாளராக மைனா நந்தினி கலந்து கொண்டார். இதில் கடந்த வாரம் அசல் கோளாறு வெளியேற்றப்பட்ரார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சியமில்லாத நபராக கலந்து கொண்டனர். அதில் அசல் கோளாறும் ஒருவர்.

-விளம்பரம்-

வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இன்றும் இவர் அடையாளமாக இருப்பது ‘ஜோர்த்தாலே’ பாடல் தான்.

- Advertisement -

இந்த பாடல் வெளியான போது பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று அணைத்து சமூக வலைத்தளத்திலும் வைரலானது. இதன் மூலமே இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், இவர் பிக் பாஸில் பல பெண்களை அடிக்கடி தடவிக்கொண்டும் கட்டிப்பிடித்துகொண்டும் இருந்ததால் இவரை சமூக வலைத்தளத்தில் தடவல் மன்னன் என்று கேலி செய்து வந்தனர்.

மேலும், பெண்களிடம் தொடர்ந்து அத்து மீறி வரும் இவரை வெளியே அனுப்ப வேண்டும் என்று சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம் இவர் நாமினேஷனின் இடம்பெற்று இருந்தார். இவரை வெளியே அனுப்ப ஆவலுடன் காத்துகொண்டு இருந்த ரசிகர்கள் இவர் நாமினேஷனில் வந்த உடனே இவருக்கு வாக்களிக்காமல் போக இவர் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அசல் கோளாறு என்ன தவறு செய்தான் என்று கூல் சுரேஷ் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ‘என் தலைவன் STR இருந்த வரை அந்த நிகழ்ச்சியில் பெண்கள் எல்லாம் இழுத்து போத்தி ஒழுங்கா இருந்தாங்க. ‘அசல் கோளாறு தம்பி மீது எந்த தவறும் இல்லை நானும் அவரைப் பற்றி தவறாக பேசியிருந்தேன் ஆனால் அதைப்பற்றி பின்னர் யோசித்துப் பார்த்தேன் தெரிகிறது தானா அடங்கிடும் அப்போ நீங்க ஏன் தடம் போகும்போது அமைதியாக இருந்தீர்கள். அசல் கோளாறை வெளியில் அனுப்பியதை நான் கண்டிக்கிறேன்’ என்று பேசி இருந்தார். அப்போது அவரிடம் அசல் கோளாறு உங்களை மிரட்டினாரா ஏன் இந்த மாற்றம் என்று கேட்டதற்கு ‘அவரை நான் பார்த்து கூட இல்ல’ என்று கூறியுள்ளார் கூல் சுரேஷ்.

அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவர் குறித்து பேசிய கூல் சுரேஷ் ‘தம்பி ஏன் அப்படி தடவுற? தடவிக் கொண்டே இருப்பியா? தயவு செய்து அப்படி தடவாதே. எல்லாரும் பார்க்கிற நிகழ்ச்சி. நான் பொதுவாக தான் பேசுகிறேன். கோளாறு நீ உண்மையிலே கோளாறு தான். தயவு செய்து அப்படி தடவாத. நிறைய பேர் கல்யாணம் ஆகாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்?’ என்று பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement