கொரோனா குறித்து எந்த நடிகர், நடிகைகள் சொல்லாத விஷயத்தை சொன்ன நடிகை ரித்விகா. வைரலாகும் வீடியோ.

0
43111
Rithvika
- Advertisement -

உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் விஷயம் இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது இந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

- Advertisement -

மேலும், இந்த கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை வீடியோ மூலம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் புகழ் நடிகை ரித்திகா அவர்கள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை இதுவரை எந்த ஒரு நடிகர் நடிகைகளும் சொல்லாத விஷயத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ரித்விகா.

அதில் அவர் கூறி இருப்பது, எல்லோருக்கும் வணக்கம். கொரோனா வைரஸ் பற்றி நிறைய வீடியோக்களை பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் நானும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். வெளியில் சென்று வந்தால் அதிகப்படியாக கைகழுவ வேண்டும் என்று கூறுவதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வழக்கத்தை விட அதிக அளவில் கைகழுவுகிறார்கள்.

-விளம்பரம்-

இதையும் பாருங்க :அனிருத்துக்கு அப்படி தான் இருக்கும் என்று நம்புகிறேன். கிண்டல்களுக்கு பாவனா பதிலடி.

இதற்கும் ஒரு சிறு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதாவது எங்கு வெளியில் சென்று வந்தாலும் 20 நொடிகள் கைகழுவ வேண்டும் என கூறியுள்ளதால் தண்ணீர்க் குழாயைத் திறந்து வைத்துக் கொண்டே நான் உட்பட பலரும் கை கழுவுகிறோம். இதனால் தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் குழாயை மூடி விட்டு நன்கு தேய்த்த பிறகு கைகளை கழுவ வேண்டும் என்கிற எண்ணத்தை அனைவரும் மறந்து விடுகிறார்கள். அடுத்த மாதத்திலிருந்து கோடை காலம் துவங்க உள்ளதால் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட உள்ளது.

மேலும், 20 நொடிகள் கை கழுவும் போது முதலில் கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு தண்ணீர் குழாயை மூடிவிட்டு பின் சோப்பு போட்டு நன்றாக கையைத் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் தண்ணீரை திறந்து கை கழுவ வேண்டும். இதனால் நிறைய தண்ணீரை சேமிக்க முடியும். நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்க முடியும். இந்த பிரச்சனையின் காரணமாக நாம் அதிக தண்ணீரை கை கழுவதற்காக தற்போது செலவிட்டு வருகிறோம். இதனை முக்கியமாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இப்படி இவர் கூறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் நடிகை ரித்விகாவுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement