விவேக் இறப்பிற்கு தடுப்பூசி காரணமா ? தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார். வல்லுநர் குழு விளக்கம்.

0
590
vive
- Advertisement -

கொரோனா தடுப்பு ஊசி போட்டதால் தான் நடிகர் விவேக் இறந்தார் என்று பரவிவந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு தகவல் அளித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் விவேக். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இவர் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்புக்கும், நகைச்சுவை திறமைக்கும் என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

-விளம்பரம்-
vivek

மேலும், நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தார். பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி குறித்து விழிப்புணர்வையும் சொல்லியிருந்தார். அதில் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளவேண்டாம், அனைவரும் தடுப்பூசி போடுங்கள் என்று விவேக் கூறியிருந்தார். நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த நாளே திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் உயிரிழப்பிற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : டாஸ்கில் வென்ற 5 பேருக்கு பிக் பாஸ் கொடுத்த செம சலுகை – சிபியின் தலைவர் பதவிக்கும் ஆப்பு.

- Advertisement -

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று சிலர் சோசியல் மீடியாவில் வதந்திகளைப் பரப்பினர். இதனிடையே விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்புசி தான் காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் நடிகர் விவேக்கின் மரணம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மத்திய சுகாதார ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தேசிய தடுப்பூசி ஆய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

மகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு.. நடிகர் விவேக்கின் உடல்  தகனம் (படங்கள்)

மேலும், விசாரணையில் நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்புசிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதன் மூலம் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று சோஷியல் மீடியாவில் விவேக் மரணம் குறித்து பரவி வந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விவேக் மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. இனிமேலாவது விவேக்கின் மரணம் குறித்து எந்த ஒரு வதந்திகளும் சோசியல் மீடியாவில் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement