வேலூர் மாநகராட்சியின் அவல நிலை. மேயர் மீது அதிருப்தியில் மாநகராட்சி ஆளுங்கட்சி கவுன்சிலர்கள்.

0
333
- Advertisement -

வேலூரில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி மீது ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக கோபத்தை காட்டினார்கள். ஆளுங்கட்சியின் கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் குமுறல்களுக்கும் பதிலளிக்க முடியாமல் வேலூர் மாநகராட்சியின் மேயரும் ஆணையரும் திணறினர். இதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் வேலூர் மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் சாலைகள் குண்டும் குழியுமாகவும் சாலையில் குப்பைகளும் கால்வாய்களும் தூர்வாரபடாமல் இருப்பதால் கழிவுநீர் குட்டைகளில் என தினம் தினம் அவதி பட்டுகொண்டு இருப்பதாகவேலூர் மக்கள் அவதியில் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

வேலூர் மக்கான் சிக்னல் அருகில் இருந்து புதிய பேருந்து செல்லக்கூடிய சாலை வீரபுறமும் கடைகளும் வணிக வளாகங்களும் அதிகம் ஆயிற்று ஆகையால் பழைய பேருந்து நிலையம் முதல் சிஎம்சி வரை பழைய பேருந்து நிலையம் வரை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. என் நிலையில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியோர்கள் சாலையோரம் இருந்த திறந்த வெளி  கால்வாயில் தவறு விழுந்ததால் அது பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

அந்த சாலையோரம் இருக்கும் பழகினால் கால்வாய் தூள் வரப்படாமல் இருப்பதாலும் கால்வாய் நிரம்பிய சாலையோரம் அங்கங்கே வருவது காட்சி அளிக்கின்றது. அப்படிப்பட்ட சாலையில் நடைபாதை அமைக்கப்படவில்லை. அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பலருக்கும் அந்த சாலையை கடப்பது செயலாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜோதி பிரியாணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் எதிரே உள்ள சாலை மிகவும் ஆபத்தான நாளாக இருந்து வருகிறது. அதனை மாநகராட்சி கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது.

 ஆகையால் அந்த பகுதிகளில் நிறைய விபத்துகள் நடைபெருகிறது. சாலையில் வந்து கொண்டிருந்த முதியவர் அப் பள்ளத்தில் விழுந்தார். அந்தப் பள்ளத்தில் விழுந்த முதியவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவருக்கு பெரிய அளவில் காயமது ஏற்படவில்லை ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. அவர் ஹெல்மெட் அணியாமல் இருந்திருந்தால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

-விளம்பரம்-

அங்கு அக்கம் பக்கத்தில் இருந்த வியாபாரிகள் கூறுகையில் கால்வாயில் சீரமைக்க கோரி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்தின் முடிவுகளும் ஆனால் இதுவரை மாநகராட்சி சார்பில்  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. மேலும் அவர்களிடத்து கேட்டால் இதனை நெடுஞ்சாலைத் துறையின் மீது பழி போட்டுவிட்டு மாநகராட்சி நிர்வாகம் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது.

மழைக்காலம் நெருங்க நெருங்க நிலைமை என்னும் மோசமாகவே இருக்கும். இதுவரை மெத்தனமாக இருந்த மாநகராட்சி இனியாவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் கால்வாய் சேரமைத்து நடப்பது சரிசெய்து பாதசாரிகளுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அங்கு இருந்த  வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

Advertisement