எங்கள் குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை – கோவையில் முதல்முறையாக சான்றிதழ் வாங்கிய பெற்றோர்கள்.

0
555
karthi
- Advertisement -

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஒரு குழந்தைக்கு ஜாதி, மதம் தேவை இல்லை என்று சான்றிதழ் வாங்கி இருக்கும் பெற்றோர்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே பள்ளி முதல் கல்லூரி, வேலை செய்யும் இடங்கள் வரை என அனைத்து இடங்களிலும் ஜாதி சான்றிதழ் கேட்கப்படுவது வழக்கமான ஒன்று. அரசு வேலை தொடங்கி தனியார் வேலை வரை என எல்லா இடங்களிலுமே ஒருவருடைய ஜாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் ஜாதிச் சான்றிதழை வைத்து தான் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை என பலரும் ஜாதி சான்றிதழ் வைத்திருப்பது வழக்கமான ஒன்று. இதனால் சாதி, மதம் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சாதிக்காகவே வாழ்கிற கூட்டம் எல்லாம் இருக்கிறது. அந்த அளவிற்கு சாதி, மதத்திற்கு பல ஆண்டு காலமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மக்கள்.

இதையும் பாருங்க : செந்தில் முன்பே அவரது வசனத்தை பேசிக் காட்டிய நடிகர் செந்திலின் பேத்தி – வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

கோவை பெற்றோர்கள் செய்தது:

இந்த நிலையில் என் குழந்தைக்கு ஜாதி, மதமே இல்லை என்று கோவை பெற்றோர்கள் சான்றிதழ் வாங்கி இருக்கும் தகவல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் கே கே புதூர் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். தற்போது அவருக்கு 33 வயதாகிறது. இவருக்கு மூன்றரை வயது மகள் இருக்கிறார். இதனால் இவர் தன்னுடைய மகளை எல்கேஜி வகுப்பில் சேர்க்க பல்வேறு பள்ளிகளை நாடி இருந்தார். ஆனால், பள்ளியில் ஷீட் கிடைக்கவில்லை.

கோவை பெற்றோர்கள் வாங்கிய சான்றிதழ்:

ஏன்னா, அந்த சிறுமியின் பெற்றோர்கள் விண்ணப்பத்தில் ஜாதி மதம் குறிப்பிடவில்லை. இதனால் பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை. இதை அடுத்து சிறுமியின் தந்தை தனது மகளுக்கு ஜாதி மதம் இல்லை என்ற சான்றிதழ் வாங்க முயற்சி செய்திருந்தார். பின் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு வருவாய் துறை முதல் முறையாக இந்த சான்றிதழ் வழங்கி இருக்கிறது. மேலும் இது குறித்து குழந்தையின் பெற்றோர் நரேஷ் கார்த்திக் கூறியிருந்தது,

-விளம்பரம்-

ஜாதி,மதம் இல்லை சான்றிதழ்:

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை. இதை 1973ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம். வருவாய் துறையினரை சந்தித்து பேசியபோது அவர்களுக்கும் இது குறித்து தெரியவில்லை. பிறகு கோவை கலெக்டரை தொடர்புகொண்ட போது அவர் வடக்கு தாசில்தார் தொடர்பு கொள்ள அறிவித்திருந்தார்.

நரேஷ் கார்த்திக் கூறியது:

அதன் பின்னரே குழந்தைக்கு சான்றிதழ் கிடைத்தது. எனது குழந்தைக்கு வருங்காலத்தில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் தேவையில்லை. ஜாதியை இணைக்க விண்ணப்பிக்க மாட்டேன். மேலும், இது புதிய நடைமுறை என்பதால் ஜாதி இல்லை சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இனி வரும் குழந்தைகளுக்கு சான்றிதழ் எளிதில் கிடைக்கும் என்று கூறி இருந்தார். இப்படி கோவை பெற்றோர்கள் செய்திருக்கும் செயல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement