அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தளத்தில் பட்டயை கிளப்பி வருகிறது. இந்த ட்ரைலர் வெளியான நேரத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சக்க போடு போட்டது.
தல படத்தில் பைக் காட்சி இல்லாமலா?. விஸ்வாசம் படத்திலும் பைக் காட்சி உள்ளது. என் கதையில நான் வில்லன்டா என்று அஜித் பன்ச் வசனம் பேசுவது தூள். ஏறி மிதிச்சேன் வை ஏரியாவ வாங்குறதில்லை மூச்சை கூட வாங்க முடியாது என்று அஜித் கெத்து காட்டுகிறார்.
இந்நிலையில், பிரபல அரசியல் மற்றும் விளையாட்டு விமர்சகர் சுமந்த் ராமன் விஸ்வாசம் ட்ரெய்லர் குறித்த தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். “அதிரடி ஆக்ஷன் நிறைந்த விஸ்வாசம் ட்ரெய்லரை பார்த்தேன். படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது எகிறியுள்ளது” என கூறியுள்ளார்.