ரஹ்மான் – இளையராஜா ட்விட்டர் உரையாடல் குறித்து Sarcastic ட்வீட் போட்ட தமிழ் பட இயக்குனர் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
518
Ilayaraja
- Advertisement -

ஒன்றாக இணைந்து பணியாற்றுவது குறித்து பதிவிட்ட ஏ ஆர் ரஹ்மான் மற்றும் இளையராஜாவின் பதிவிற்கு கேலியாக ட்வீட் போட்ட தமிழ் பட இயக்குனர் சி எஸ் அமுதனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழில் 2010 ஆம் ஆண்டு முழு நீள காமெடி படமாக வெளிவந்த படம் ” தமிழ் படம் “. புதுமுக இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். லாஜிக் இல்லா காமெடியால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் படம் பாகம் 1- இல் பல்வேறு தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்த பல்வேறு மாஸ் சீன்களை செம கலாய் கலாய்த்திருப்பார் நடிகர் சிவா.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-41.png

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படம் 2வை எடுத்தார் அமுதன். ஆனால், முதல் படம் அளவிற்கு இந்த படம் வெற்றியடையவில்லை. அதே போல இறுதியாக நடிகர் விமலை வைத்து ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால், அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்கிவிடுகிறார்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஏ ஆர் ரஹ்மான் – இளையராஜாவின் ட்விட்டர் உரையாடல் குறித்து கமன்ட் போட்டு நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். மார்ச் 5ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கலாச்சார கூட்டமான எக்ஸ்போ 2020 துபாயில் நடந்தது. இதில் இளையராஜா பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இளையராஜா துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமான் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிற்கு வருகை தந்து இருக்கிறார்.

இளையராஜா ரகுமான் சந்திப்பு :

அப்போது இளையராஜாவுடன் ஏ ஆர் ரகுமான் புகைப்படம் எடுத்திருக்கிறார்.அதை தான் ரகுமான் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கூறியிருப்பது, எங்கள் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிருக்கு மேஸ்ட்ரோ இளையராஜா அவரை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவில் அவர் ஒன்றை இசையமைப்பார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட புகைப்படமும் பதிவும் சோஷியல் மீடியாவில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இசைப்புயலின் கோரிக்கையை ஏற்ற இளையராஜா :

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் அள்ளி குவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இன்று இளையராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ ஆர் ரகுமான் வைத்த கோரிக்கையை ஏற்கபட்டுள்ளதாக பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசை அமைக்க தொடங்குவோம் என்று ரகுமானுக்கு பதில் டீவ்ட் போட்டு இருக்கிறார் இளையராஜா.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :

இப்படி ஒரு நிலையில் இந்த பதிவு குறித்து கமன்ட் போட்டுள்ள சி எஸ் அமுதன், இது நல்லா இருந்தா நான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார், இவரின் இந்த பதிவை சிலர் வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும் பலர் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் ஒரு சில நெட்டிசன்கள், யார்ரா நீ மயிரா? உன்ன யாருன்னு தெரியல… ஒத்த ஒழுங்கா டுவீட் delete பண்ணி விட்டு ஓடி போயிடு… நீ அவரு காலுக்கு கீழ் இருக்கும் செருப்பு ல ஒட்டி இருக்கும் தூசி ஈடு ஆகுவியா டா மயிரு? என்று திட்டி தீர்த்து உள்ளனர்.

சின்மயி பதிவு :

மற்றொரு நெட்டிசனோ ‘பெரிசா Sarcasm பண்றாராம், ராஜா கால் தூசிக்கு நீலாம் ஈடாவியா?’ என்று பதிவிட்டுள்ளார். ஆனால், இவரின் இந்த பதிவிற்கு வெங்கட் பிரபுவும் கமன்ட் போட்டுள்ளார். அதே போல பின்னணி பாடகியான சின்மையும் சிரித்தபடி சில எமோஜிக்களை பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement