தோட்டத்தில் பீரோ, பெட் ரூமில் வாஷிங் மிஷின் – CWC சுனிதாவின் அசாம் வீட்டின் Home Tour.

0
601
- Advertisement -

அசாமில் இருக்கும் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டி சுனிதா பதிவிட்ட அசாம் ஹோம் டூர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது ஜொலித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சுனிதா. இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் பின் இவர் ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

அதற்கு பின் இவர் தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சுனிதா படங்கள் மற்றும் சீரியல்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதுவரை குக் வித் கோமாளி 3 சீசன்களை முடிவடைந்து இருக்கிறது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக சுனிதா இருந்தார். சுனிதா வெளிமாநிலத்தவர் என்பதால் அவர் பேசும் தவறான தமிழ் மொழியும், அழகும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது சுனிதாவிற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சுனிதா செய்யும் மொக்க காமெடிகளும், க்யூட்டா கொடுக்கும் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இவர் சந்தோஷ் உடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அதோடு இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். இதில் இவர் பதிவிடும் புகைப்படம், வீடியோ எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. அதோடு இவருக்கு 1.4 மில்லியன் பாளோயர்ஸ் இருக்கிறார்கள்.

மேலும், இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் அசாமில் இருக்கும் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டி சுனிதா வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், தன்னுடைய வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருள்களை குறித்தும், நபர்களை குறித்தும் அழகாக கூறியிருந்தார்.

Advertisement