தென்னிந்திய சினிமா திரை உலகில் மிகப் பிரபலமான பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவன். இவர் திரைப்பட பின்னணி பாடகர் மட்டுமில்லாமல் பாப் இசைக் கலைஞர், இசையமைப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி என பல மொழி படங்களின் பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். ஒரு காலத்தில் இவருடைய குரலை கேட்க பலரும் காத்திருந்தனர். இவருடைய குரலால் பலரையும் கட்டிப்போட்டார்.
இந்துஸ்தான் கிளாசிக்கல் மற்றும் கர்நாடிக் மியூசிக் போன்றவற்றை முறையாக கற்றுக் கொண்டு திரைப்படங்களில் பாடியவர். அதுமட்டும் இல்லாமல் இவர் படங்கள் மட்டும் சீரியல்களிலும் நடித்து உள்ளார். தன்னுடைய பாடல் திறமைக்காக இவர் பல்வேறு விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல பாட்டு நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று உள்ளார். இவர் சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சித்தார்த் மகாதேவன், ஷிவம் மகாதேவன் என்ற 2 மகன்கள் உள்ளார்கள்.
இதையும் பாருங்க : இவங்க, காலைல எந்த போட்டோவும் போட மாட்டாங்களா ? நேற்று இரவு ஷாலுவின் பதிவிற்கு வந்த கமன்ட்.
இந்நிலையில் ஷங்கர் மகாதேவனின் மகனை பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் பாடகராக அறிமுகம் செய்து உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. றெக்க படத்தினை இயக்கிய இயக்குநர் ரதன சிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சீறு”. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்து உள்ளார். இந்த படம் காதல், ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக அறிமுகம் செய்கிறார் டி.இமான். சில தினங்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டார்கள். விசுவாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடலைப் பாடி சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. இது அனைவருக்கும் தெரிந்தே. தற்போது இந்த சீறு படத்தில் மாற்றுத் திறனாளியான திருமூர்த்தி, டி. இமான் இசையில் ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த படத்தில் செவ்வந்தி என தொடங்கும் பாடலை திருமூர்த்தி பாடியுள்ளார்.
இது குறித்து டி.இமான் அவர்கள் கூறியது, இந்த படத்தில் சங்கர் மகாதேவன் மகன் பாடிய பாடல் சிறப்பாக அமைந்து உள்ளது. அதோடு மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி பாடிய பாடலும் நன்றாக வந்திருக்கிறது. இவர் பாடிய பாடலை அனுதாபத்தின் அடிப்படையில் கேட்க வேண்டாம். இந்த பாடலும் அவரது குரலும் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் இந்த பாடலை பகிர்ந்து அவரை ஊக்கப்படுத்துங்கள். என்னை பொறுத்தவரை இவர்கள் இருவரும் பாடிய பாடல்கள் நன்றாக உள்ளது. எனக்கு இருவரும் சமம் தான் என்று கூறினார்.