‘டாடா’ முதல் ‘போர் தொழில்’ வரை – 2023ல் வெற்றிகண்ட தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குனர்கள் – டாப் 5 நபர்கள்.

0
1911
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நடப்பு ஆண்டில் அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் மக்களை ரசிக்கும் வகையில் வகையிலான படங்களை புது முக இயக்குனர்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் மத்தியில் நம்பிக்கையும் சந்தோஷமும் நிலவி வருகிறது.

-விளம்பரம்-

அதிலும், குறிப்பாக நடந்து கொண்டிருக்கும் ஆண்டில் தமிழ் சினிமா உலகில் மாதத்திற்கு ஒரு அறிமுக இயக்குனர் புதிய படத்தை வெளியிட்டு வருகிறார். அதுவும் அந்த படங்களும் முன்னணி நடிகர்களின் படங்களை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. தற்போது தமிழ் சினிமா பிறமொழி சினிமாக்களை விட முன்னேறி இருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் புதுமுக இயக்குனர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் பட்டியல் தற்போது வெளியாகிறது.

- Advertisement -

டாடா படம்:

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக கவின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சில படங்கள் வெளிவந்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் அறிமுகம் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த படம் டாடா. இந்த படத்தில் அபர்ணாதாஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரெட் செயின்ட் நிறுவனம் வாங்கிருந்தது. காதலித்து திருமணம் செய்து கொள்ளும் காதலர்கள் திருமணத்திற்கு பின் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சமூக- பொருளாதார சிக்கல்களையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் பேசும் படமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தந்தை மகன் பாசத்தை மையமாக கொண்ட கதையாகவும் இருக்கிறது. இந்த படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் 20 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அயோத்தி:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சசிகுமார். தற்போது புதுமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்திருந்த படம் அயோத்தி. இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் தான் வெளியாகி இருந்தது. மதம் கடந்த மனிதநேயத்தை வலியுறுத்தும் கதையாக இந்த படம் இருக்கிறது. ரொம்ப சென்டிமென்ட் ஆன கதையாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரம் கவர்ந்திருக்கிறது. ஆனால், இந்த படத்தின் கதை குறித்து பல சர்ச்சைகளும் எழுந்து இருந்தது. இருந்தாலும், படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

யாத்திசை:

இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம் யாத்திசை. தமிழின் முக்கியமான ஆவண பதிவாக உருவான படத்தில் பெரும்பாலான நடிகர்கள் புது முகங்களே. அதிகாரத்தை அடைய பேரரசை எதிர்க்கும் சிறுகுடி மக்களின் போராட்டமே படத்தின் கதை. இந்த படம் 7 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் 20 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்திருக்கிறது. மேலும், இந்த படத்தின் இயக்குனர் சீரியல்களை இயக்கியிருந்தார். தற்போது தான் முதன் முதலாக வெள்ளித்திரையில் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குட் நைட் :

அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் குட் நைட். இந்த படம் குறட்டையை மையமாக வைத்து உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்ட படம். இந்த படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் தயாரித்து இருக்கிறது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

போர் தொழில் :

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் போர் தொழில். இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றிருக்கிறது. தற்போதும் இந்த படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisement