பிரபல டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தானா?

0
532
- Advertisement -

டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடன கலைஞராக திகழ்ந்தவர் ராம்ஜி. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் நடன கலைஞர் மட்டும் இல்லாமல் நடன இயக்குனர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் வீரபாண்டி கோட்டையிலே, கண்ணெதிரே தோன்றினாள், உனக்காக மட்டும், பெண்ணின் மனதை தொட்டு, சமஸ்தானம், தோஸ்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிகராகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவி தங்கை – அக்காவை விட பாஸ்ட்டா இருக்காரே?

- Advertisement -

அது மட்டுமில்லாமல் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் ராம்ஜி அவர்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். அதிலும் இவர் நடித்த ரமணி விஸ் ரமணி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றது. தற்போதும் இது தொடர்பான காமெடிகள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி தான் வருகிறது.

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த வள்ளி என்ற தொடரில் நடித்திருந்தார். தற்போதும் இவர் சீரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் ராம்ஜியின் குடும்பம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ராம்ஜி மனைவி செய்யும் வேலை:

நடிகர் ராம்ஜி அவர்கள் அம்ருதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஆவார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் இந்தியன் 2 என்ற படத்திலும் அம்ருதா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்குகிறார். பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த படம் தற்போது உருவாகியிருக்கிறது.

ராம்ஜியின் மனைவி புகைப்படம்:

இதனை அடுத்து கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் தக்கலைப் என்ற படத்திலும் அமிர்தா ஆடை வடிவமைப்பளாக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் இவர்களுடைய குடும்ப புகைப்படம் தான் இணையத்தில் பயங்கர வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த பலரும், இவர்தான் ராம்ஜியின் மனைவியா! என்று ஆச்சரியத்தில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement